எம் எஸ் வி அவர்களிடம் இசை பயில்வதற்காக வந்த மனோ இளையராஜாவின் இசையில் முதன் முதலில் தன்னுடைய பாடலை பாடினார்.
பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே என்ற பாடல் தான் மனோவின் முதல் பாடல். அதன் பிறகு வந்த சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற தேன்மொழி எந்தன் தேன்மொழி, எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.
இசைஞானி இளையராஜா தான் நாகூர் என்ற பெயரை மாற்றி மனோ என்ற நாமகரணத்தை மனோவுக்கு சூட்டினார் அந்த பெயரை இன்று வரை நிலைத்து நிற்கிறது.
மனோ இனிமையான பல பாடல்களை பாடியவர்.குறிப்பாக இரண்டில் ஒன்று திரைப்படத்தில் இடம் பெற்ற சங்கீதப் பூ மலையே இந்திரன் சந்திரன் படத்தில் வரும் பாடல்கள், ராஜாதி ராஜா பட பாடல்கள் இப்படி எண்ணற்ற பாடல்களை மனோவின் பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
எஸ்பிபிக்கு பதில் மனோ என்ற வகையில் 90களில் பல படங்களில் இவரின் பாடல்கள் இடம்பெற்றது எஸ்பிபி பாட முடியவில்லை என்றால் அந்த பாடலை மனோதான் பாடுவார். அந்த அளவுக்கு எஸ்பிபி க்கு பதிலாக பல பாடல்களை மனோவுக்கு கொடுத்து மகிழ்ந்தார் இசைஞானி இளையராஜா.
மனோ சித்ரா குரல்களில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் இவர் இருவரும் இணைந்து பாடிய பல பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. தொண்டையை சுருக்கி வித்தியாசமாய் பாடிய இந்திரன் சந்திரன் படத்தில் வரும் அடித்தது கொட்டம், சூரசம்காரம் படத்தில் வரும் வேதாளம் வந்திருச்சு, காதலன் படத்தில் வரும் முக்காலா முக்காப்புலா,போன்ற பாடல்கள் மனோவின் சினிமா பாடல்கள் வரிசைல ஒரு மைல் கல்லான பாடல்கள் என்று சொல்லலாம் இன்று மனோவுக்கு பிறந்தநாள் அவரை நாம வாழ்த்துவோம்.

