பிச்சைக்காரன் திரைப்படத்தை எவராலும் மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சசி அவர்கள் இயக்கியிருப்பார். அதில் கதாநாயகனாக நடித்த விஜய் ஆண்டனிக்கு இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
2016 வெளியான இந்த படம் ஆக்சன் திரில்லர் மற்றும் தாய்ப் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இப்படத்தை அடுத்து விஜய் ஆண்டனிக்கு அவரது திரைப்பட வாழ்க்கையில், பலவித கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படத்தை ஏற்று நடித்தார். தமிழ் சினிமாவில் 2016-இல் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், வசூலிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த முக்கிய காரணம் நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்போது, அந்த ஹிட் ஜோடி மீண்டும் இணையவிருக்கிறது. இயக்குநர் சசி, தனது புதிய படத்தை “நூறு சாமி “எனப் பெயரிட்டுள்ளார். இதில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக்குகளை கொண்டு டிரெண்டாக்கி வருகிறார்கள்.

நூறு சாமி படம் எப்படிப்பட்ட கதை கொண்டிருக்கும், அது பிச்சைக்காரன் போலவே மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்துமா? என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் இசை ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பு அனுபவத்தை தந்திருக்கிறது.
தற்போது படத்தின் மற்ற நடிகர்கள், படக்குழு விவரங்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.





