---Advertisement---

சிக்கு புக்கு ரயிலே புதிய வடிவில் வெளியிட்ட சுரேஷ் பீட்டர்ஸ்

Published on: November 26, 2020
---Advertisement---

சுரேஷ் பீட்டர் 90களில் புகழ்பெற்ற ராப், பாப் பாடகர் ஆவார். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் சிக்கு புக்கு ரயிலே உள்ளிட்ட ஜென் டில் மேன் பாடல் எல்லாம் இவர் பாடியதே.

தனியாக இசை ஆல்பத்தை அக்காலம் தொட்டே இவர் வெளியிட்டு வருகிறார். சரத்குமார் நடித்த கூலி, தென்காசிப்பட்டினம் படங்களின் இசையமைப்பாளரும் இவரே. சில வருடங்களாக அதிகம் திரையில் தோன்றாத இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

ஒரு சில பழைய பாடல்களையும் புதிய வடிவில் பாடி அவ்வப்போது யூ டியூபில் வெளியிடுகிறார்.

அப்படியாக சமீபத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலை பாடி வேறு வடிவத்தில் வெளியிட்டுள்ளார்.

இது போல ஊர்வசி, அந்த அரபிக்கடலோரம் உள்ளிட்ட பல பாடல்களை புதிய வடிவில் வெளியிட்டு வருகிறார்.

https://www.youtube.com/watch?v=QcUzS1DPcms&feature=youtu.be&fbclid=IwAR14QwNWGAHu0sioaqBd-c2C2M0m08wAs3MQJQBMQhsBzBZ-W2zRjTgNG7U

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.