Vijay TVK

தளபதி விஜய் – சினிமா டூ அரசியல் , ஒரு லெஜண்ட் ஜர்னி!

தமிழ் சினிமா சொன்னா முன்னணி ஹீரோவாக மின்னும் பெயர் தளபதி விஜய் தான். இப்போ நிலவரம் என்னனா, ரஜினி – கமல் எல்லாரையும் விட பாக்ஸ் ஆபிஸ் பிசினஸ்ல விஜய் தான் டாப்! நாள் தோறும் அவரது கிராஃப் ஸ்கை ஹை. ரஜினியின் இடத்தையே தாண்டியிருக்கும் விஜய், அடுத்த சில வருடங்களுக்கு தமிழ் சினிமாவை ரூல் பண்ணுவார் என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான், அவர் புது சவாலாக அரசியலுக்குள் குதிக்கப் போறேன் என்று அறிவிச்சாரு.

தமிழக வெற்றிக் கழகம்”னு கட்சி ஸ்டார்ட் பண்ணிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி புல்லு ஸ்விங்-ல ரெடி ஆகிறாரு. விக்கிரவாண்டியில் நடந்த அவரது முதல் மாநாடு வெற்றி பெற்றது. அடுத்தகட்டமாக, மதுரையில் ஆகஸ்ட் 21-ம் தேதி இரண்டாவது மாநில மாநாடு நடைப்பெறகிறது. அதோட, எச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று அவர் அறிவித்ததும், தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.

TVK Vijay

அதுல கூடுதலா சவுண்ட் பண்ணினது விஜயின் தந்தை – மூத்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவர் சொன்னது என்னனா:
“ஆரம்பத்துல என் மகனை வைத்து படம் பண்ணி தாங்கனு ஒவ்வொரு டைரக்டரிடமும் கேட்டேன். எல்லாரும் இவரால முடியாதுனு சொல்லிட்டாங்க. அதனாலே நான் தான் விஜயை வைத்து படம் எடுத்தேன். அப்போது ரிஜக்ட் ஆனவர், இப்போ தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ, நாளைய தலைவன்!”

அதுக்கப்புறம் இன்னொரு விஷயம் – எவ்வளவோ தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விஜயும் அவரது தந்தையும் அவங்களை வெளியில் ஒருபோதும் காட்டிக்கொள்ளவில்லை. சந்திரசேகர் ஒருபோதும் மகனை குறைத்து பேசவே இல்லை.

அப்படி இருக்க, ஒருகாலத்தில் விஜயின் முகத்தை வைத்து “இவர் ஹீரோவா? மூஞ்சி ரொம்ப கேவலாமா இருக்கு”ன்னு கேலி பண்ணிய காலமும் இருக்கு. பலரும் “தகர டப்பா மூஞ்சி”னு பன்ச் போட்டாங்க. ஆனால் அந்த கிண்டலையெல்லாம் கவலைப்படாமல், இன்று அந்த விஜயையே மக்கள் “தளபதி”ன்னு பெருமையோட கூப்பிடுறாங்க.

இப்போ அவருடைய வளர்ச்சி பார்த்து நாளிதழ்களே பக்கம் பக்கமா ஹெட்லைன்ஸ் போட்டு பாராட்டுற மாதிரி நிலைமை. சினிமாவில் சூப்பர் ஸ்டார், அரசியலிலும் அடுத்த லெவல்!