---Advertisement---

கேப்டன் பிரபாகரனுக்கு இன்றுடன் வயது 30

Published on: April 14, 2021
---Advertisement---

விஜயகாந்த் நடித்த மாபெரும் ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்றுதான் கேப்டன் பிரபாகரன். கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம். சந்தனக்கடத்தல் செய்து இரு மாநில அரசுகளால் பிடிக்க முடியாத வீரப்பன் பற்றிய கதைதான் இது.

இதில் வீரப்பனாக இல்லாமல் வீரபத்ரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.

எந்த நடிகருக்கும் 100வது படம் பெரிய அளவில் ஓடி இருக்காது விஜயகாந்திற்கு மட்டும் மிகப்பெரிய அளவில் 100வது படம் ஓடியது.

ஆர்.கே செல்வமணி இயக்கி இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் ஆட்டமா தேரோட்டமா, பாசமுள்ள பாண்டியரே என்ற இருபாடலும் பெரிய ஹிட் ஆனது.

இந்த படத்தின் வெற்றி விஜயகாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இன்றுவரை இப்படம் எந்த  தொலைக்காட்சியில் ஒளிபரப்படுவது இல்லை. டிவி ரைட்ஸ் இப்படத்துக்கு வழங்கப்படவில்லை போலும்.

இன்றுடன் 30 வயதை எட்டுகிறான் கேப்டன் பிரபாகரன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.