முன்பு எல்லாம் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஒரிரு வருடங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது. ஆரம்பத்தில் ஓடிடி ரிலீஸ்க்கு எதிர்ப்பு இருந்தாலும் கொரோனா வேறு சேர்ந்து தியேட்டரை தொடர்ந்து மூடும் அளவுக்கு தள்ளப்பட்டதால் ஓடிடி பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது சில படங்கள் டிவியிலேயே நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகின்றன. சில நாட்கள் முன் புலிக்குத்தி பாண்டி என்ற திரைப்படம் சன் டிவியில் நேரடியாக ப்ரிமியர் ஷோவாக ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்த பூமிகா என்ற திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
வரும் 22 ஆகஸ்ட் அன்று இப்படம் ஒளிபரப்பாகிறது.








