---Advertisement---

இரண்டாம் குத்து படம் இயக்கியவர்களின் வீட்டில் பெண்கள் இல்லையா- பாரதிராஜாவின் காட்டமான கேள்வி

Published on: October 8, 2020
---Advertisement---

நேற்று சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் இரண்டாம் பாகம் டீசர் ரிலீஸ் ஆனது.

பார்க்கவே கண்கள் கூசும் வகையிலும் காதில் கேட்க முடியாத வகையிலும் இருக்கும் டீசரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் காட்டமான அறிக்கை இதோ.

“சினிமாவினால்‌ சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால்‌ மதம்‌ கடந்த மனங்கள்‌ இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும்‌ துணிவு மிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும்‌ தமிழர்‌ பண்பாடு, மண்ணின்‌ மணம்‌ பரப்புவது, பெண்‌ சுதந்திரம்‌ போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவை எல்லாம்‌ சாத்தியப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம்‌ சாதாரணமல்ல. பல கலைஞர்கள்‌ கட்டியமைத்த கூடு. தார்மீகப்‌ பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள்‌ நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம்‌ என்ற போர்வையில்‌ கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்‌.

சினிமா வியாபாரமும்தான்‌… ஆனால்‌ வாழைப்பழத்தைக் குறிகளாகச்‌ செய்து அதைக்‌ கேவலமான பதிவோடு பொதுமக்களின்‌ பார்வைக்குக் கொண்டு செல்லும்‌ நிலைக்கு அவ்வியாபாரம்‌ வந்து நிற்பது வேதனையடையச்‌ செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள்‌ சேர்ந்து இந்த சினிமாவைக்‌ கட்டமைத்தார்கள்‌?

சினிமா வாழ்க்கை முறையைச்‌ சொல்லலாம்‌. தப்பில்லை. இலைமறைகாய்‌ மறையாகச் சரசங்கள்‌ பேசலாம்‌. ஆனால்‌ இப்படிப் படுக்கையை எடுத்து நடுத்‌ தெருவில்‌ வைப்பது எந்தவிதத்தில்‌ சரி என்பது?

நான்‌ கலாச்சார சீர்கேடு எனக்‌ கூவும்‌ நபரல்ல. ஆனால்‌, என்‌ வீட்டின்‌ கண்ணியம்‌ காக்கப்பட வேண்டும்‌ என நினைப்பவன்‌. கலைநயத்தோடு செய்யப்படும்‌ எந்தப் படைப்பும்‌ ஆழ விழுந்து ரசிப்பவன்‌, ஆனால்‌ ‘இரண்டாம்‌ குத்து’ என்ற படத்தின்‌ விளம்பரத்தை என்‌ கண்ணால்‌ பார்க்கவே கூசினேன்‌. இத்தமிழ்‌நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள்‌ இதைப்‌ பார்க்கக்‌ கூசியிருக்கும்‌?

எத்தனை வளரிளம்‌ பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்‌? கல்வியைப் போதிக்கிற இடத்தில்‌ காமத்தைப்‌ போதிக்கவா முன்வந்தோம்‌? இதையெல்லாம்‌ அனுமதியின்றி வெளியிடக்‌ கிடைத்த சுதந்திரம்‌ என்னைப் பதைக்க வைக்கிறது. நாளை இன்னும்‌ என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலை கொள்கிறேன்‌.

இதையெல்லாம்‌ செய்பவர்கள்‌ வீட்டில்‌ பெண்‌ மக்கள்‌ இல்லையா? அவர்கள்‌ இதைக்‌ கண்டிக்க மாட்டார்களா?. அவர்கள்‌ கண்டிப்பார்களோ இல்லையோ நான்‌ இங்கிருக்கும்‌ மூத்தவர்களில்‌ ஒருவன்‌ என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம்‌ தமிழ்த்‌ திரையுலகிற்கு ஆகாது எனக்‌ கண்டிக்கிறேன்‌. இதற்கெல்லாம்‌ கிடுக்கு‌ப் பிடி வேண்டும்‌ என அரசையும்‌ சென்சார்‌ போர்டையும்‌ வலியுறுத்துகிறேன்‌.

சமூகச்‌ சீர்கேடுகள்‌ செய்யும்‌ படத்தை அரங்கேற்றாதீர்கள்‌. எத்தனை பாலியல் வன்கொடுமைகள்? குழந்தைச்‌ சிதைவுகள்‌? போதாதா? இப்படிப்பட்ட படங்களும்‌ சிந்தனையும்‌ கழிவுகளையே சாப்பாட்டுத்‌ தட்டில்‌ வைக்கின்றன என்பதை மக்களும்‌ உணர்ந்துகொள்ளுங்கள்‌”.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!