---Advertisement---

டாக்காவை விட்டு எஸ்கேப் ஆகிய ஹசீனா… ஆட்சியைப் பிடித்த ராணுவம்… வங்காளதேசத்தில் பரபரப்பு…!

By Sri
Published on: August 5, 2024
---Advertisement---

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கு பெற்ற வங்காள தேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலானது பின்னர் வன்முறையாக வெடித்தது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும் பிரதமர் ஷேக் ஹசீனா பதிவு விலக வேண்டும் என்றும் முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டம் காரணமாக நேற்று கால வரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர் பலரும் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் செய்தார்கள். இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையே மோதல் உருவானது.

இதையடுத்து கலவரமாக மாறி அந்த நாடே பெரும் போராட்டக் களமாக மாறியது. இந்நிலையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறினார். அங்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றி இருக்கின்றது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.