---Advertisement---

குழல் ஓசையாலும் பாடலாலும் மனம் கவர்ந்த அருண்மொழி

Published on: October 4, 2025
---Advertisement---

அருண்மொழி இசைஞானி இளையராஜாவிடம் பல வருடங்களாக புல்லாங்குழல் வித்வானாக பணியாற்றி வருபவர். இவரின் இன்னொரு பெயர் நெப்போலியன். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் இருக்கும் நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர் இவர்.

1988ல் வந்த சூரசம்ஹாரம் படத்தில் அறிமுகமானார் இவர். அதில் இடம்பெற்ற நான் என்பது நீயல்லவோ பாடல் இவரின் முதல் அறிமுக பாடல், அதன் பின் நீலக்குயிலே பாடலும் இவரின் குரலில் இப்படத்தில் வந்து இருந்தது.

தொடர்ந்து பொங்கி வரும் காவேரியில் வெள்ளி கொலுசுமணி, தாலாட்டு பாடவா படத்தில் வரும் ஓடைக்குயில் ஒரு பாட்டு படிக்கலியா, வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா, கவிதை பாடும் அலைகள் படத்தில் இடம்பெற்ற உன்னை காணாமல் நான் ஏது என இது போல பாடல்கள் அவரை ஆரம்ப காலத்திலேயே உச்சத்திற்கு கொண்டு சென்றன.

 

கொடியில் இருந்து மெல்லியதாக அரும்பும் மல்லிகைப்பூ போல் இவரது குரல் மிக மெல்லியது என சொல்லலாம். கை வீசம்மா கை வீசு என்ற படத்தில் இவரின் குரலில் எனக்கும் உனக்கும் நெருக்கம் என்ற பாடல் வரும் ரொம்ப நல்லா இருக்கும். இது போல அரிதான பல நல்ல பாடல்களை இவர் பாடி உள்ளார்.

 

இவர் பல வருடங்களாக சினிமா பீல்டில் இருந்தாலும் இவரிடம் இசை மற்றும் பாடல் குறித்து கேள்வி கேட்க எத்தனையோ விசயம் இருந்தாலும், எந்த ஒரு மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களோ, பத்திரிக்கைகளோ இவரிடம் டீடெய்லாக ஒரு பேட்டியும் எடுத்து போட்டதில்லை. சில வருடங்கள் முன் இவரின் பேட்டி சில யூ டியூப் சேனல்களில் வெளியானது.

 

இன்றும் இவரின் இசைஞானியின் பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கும் வேலையை செய்து வருகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.