---Advertisement---

கேரளத்து காத்தே…என்னை கொஞ்சம் தாக்கே…மலையாள கரையில் அஜீத்?…

Published on: June 7, 2024
ajith
---Advertisement---

“விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு 20ம் தேதி முதல் மீண்டும் துவக்க பட இருக்கிறது என்ற தகவல் அஜீத் ரசிகர்களை மகிழ் வைத்துள்ளது. படத்தினை எப்படியாவது இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறதாம் படக்குழு.

 

எந்த நேரத்தில் படத்திற்கு இந்த பெயரை தேர்வு செய்தோமோ என யோசித்திருப்பார் இயக்குனர் மகிழ் திருமேனி, பட ஷூட்டிங் முழுமையாக கடுமையான “விடாமுயற்சி” தேவைபடுவதால்.

அஜீத் ரசிகர்களின் “விடாமுயற்சி” அப்டேட் ஏக்கத்தை போக்கவே வந்தது போல “குட் பேட் அக்லி”. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதே போல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சொல்லப்போனால் “குட் பேட் அக்லி” தான் அஜீத் ரசிகர்களை கதற வைக்காமல்  அவ்வப்போது ‘அப்-டேட்’ வெளியாகி வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் விரல் காட்டிய விதம் சர்ச்சைகளை கிளப்பினாலும் அதை பற்றி எல்லாம் கவலை படாத ரசிகர்கள் கொண்டாடி  தள்ளிவிட்டனர் அதனை.

nazlen
nazlen

விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்க படக்கூடிய படத்தை பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது இப்போது. “பிரேமலு” படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லேன் கஃபூர் “குட் பேட் அக்லி”யில் நடிக்க உள்ளதாக சொல்லுகிறது தற்போது கசிந்துள்ள இந்த தகவல். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கார் கொடுக்கிறதெல்லாம் கவர் பண்ணதுக்குத்தானாம்!...தன்னை நம்பாம இதெல்லாம் எதுக்கு பண்றீங்க..அதிரடி காட்டிய தயாரிப்பாளர்?...

இதற்கிடையில் “குட் பேட் அக்லி” படத்தின் ஷூட்டிங் தடை ஏதுமின்றி வெகு வேகமாக நடந்து வருவதாக சொல்லப்படுவதால் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ஏ.கே. ரசிகர்கள்.  அதே மாதிரி “விடாமுயற்சி”யும் தீபாவளிக்கு வெளிவந்தால் துள்ளி குதித்து விடுவார்கள் அஜீத் ஃபேன்ஸ்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual revealing Srinidhi Shetty's screen test details for Nitesh Tiwari's Ramayana.

ராமாயணம் படத்தில் சீதா வேடம்: யஷ் ராவணனாக நடித்ததால் விலகிய ஶ்ரீநிதி ஷெட்டி – வெளியான சுவாரஸ்ய தகவல்!

Editorial visual announcing the collaboration between director Ravi Arasu and producer Vetrimaaran.

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘ஈட்டி’ ரவி அரசுவின் புதிய படம்: கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக பேச்சுவார்த்தை!

Editorial graphic highlighting G.V. Prakash sharing the viral video of a little girl singing Neno Butterfly.

நெஞ்சை அள்ளும் மழலை குரல்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைப் பாடி அசத்திய சிறுமி – ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!