ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அந்தாதுன். இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்தகான் என்ற பெயரில் தயாரிக்கிறார். இரண்டு இயக்குனர்கள் இந்த படத்தை இயக்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருவரும் விலகிக்கொள்ள இப்போது தானே இப்படத்தை இயக்குகிறாராம் தியாகராஜன்.
நேற்று முன் தினம் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. இப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இதை அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிம்ரன் ஏற்கனவே ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட படங்களில் பிரசாந்துடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.








