---Advertisement---

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு!…கண்ணீர் வர வைத்த அஜீத் ஷாலினி அன்பு!…

Published on: July 3, 2024
Shalini Ajith
---Advertisement---

திரை உலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட வெற்றிகரமான தம்பதியர் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர்கள் அஜீத் -ஷாலினி தம்பதியர். “அமர்க்களம்” படத்தில் நடித்து வந்த போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

தனது காதலை ஷாலினியிடம் வெளிப்படுத்த அஜீத் எப்படியெல்லாம் முயன்றார் என சுவாரசியமான தகவலை அந்த படத்தின் இயக்குனர் சரண் சொல்லியிருந்தார்.

காதல் கைகூடி இருவரும் கணவன் – மனைவியானார்கள். அதன் பின்னர் சினிமாவிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிவிட்டார் ஷாலினி. அன்பான இந்த தம்பதியருக்கு அனோஷ்கா, ஆத்வீக் என ஒரு மகளும், மகனும் இருக்கின்றார்கள். அஜீத் தற்போது “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் “விடாமுயற்சி” படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் மிக வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜீத்தும் அஜர்பைஜான் சென்றிருந்தார்.

இந்நிலையில் உடல் நல பிரச்சனையின் காரணமாக ஷாலினிக்கு அறுவை சிகீட்சை நடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. பட ஷூட்டிங் பணிகள் நடந்து வருவதால் அஜீத் ஆப்பரேஷன் நேரத்தில் ஷாலினியுடன் இருக்க முடியாமல் போனதாக பேசப்பட்டது.

Ajith Shalini
Ajith Shalini

இந்நிலையில் தனது காதல் மனைவியை பார்க்க அஜீத் அஜர்பைஜானிலிருந்து பறந்து வந்திருக்கிறார். மருத்துவமனையில் தனது கைகளை பிடித்த படி இருக்கும் அஜீத்தின் ஃபோட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலினி.

அஜீத் – ஷாலினியின் இந்த அன்பை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். அதோடு ஷாலினி விரைவில் உடல் நலம் பெற்றி வீடு திரும்ப வேண்டும் எப்ன பிரார்த்தனைகளையும் செய்து வருகின்றார்கள்.

படப்பிடிப்பு குழுவோடு மீண்டும் இணைய அஜீத் அஜர்பைஜானுக்கு ஓரிரு நாட்களில் சென்று விடுவார் என செய்திகள் சொல்லுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!