அர்ஜூன் சொன்னதுக்கு அப்புறம் “விடாமுயற்சி” படத்து மேல கொஞ்சமா நம்பிக்கை வந்தது எப்படியும் படம் தீபாவளிக்கு வெளியாகி விடும்ன்னு. ஆனா அதுக்குள்ள பட ஷூட்டிங்கு அஜர்பைஜாமனுக்கு வர முடியாது அதனால சென்னைல வைச்சிக்கலாம்ன்னு அஜீத் சொன்னதா தகவல் வேற வெளிய வந்தது. இதிலேயிருந்து பட ஷூட்டிங் சீக்கிரம் முடியுமா?. சொன்னது மாதிரி தீபாவளிக்கு வெளியாகுமாங்குற கன்பியூஸன்ல இருக்காங்க அஜீத் ரசிகர்கள்.
அஜீத்தை “துணிவு”க்கு அப்புறமா ஸ்கிரீன்ல பாக்கவே இல்லயேங்கிற ஆதங்கத்துல இருக்குற அஜீத் ஃபேன்சுக்கு ஆறுதல் தரக்கூடிய விதாம இருக்கிற் ஒரே விஷயம் என்னான்னு பாத்தா அது “குட் பேட் அக்லி” பட ஷூட்டிங் ரொம்ப ஸ்பீடா நடந்துக்கிட்டு வருதுங்கிற ஒன்னா மட்டும் தான் இருக்க முடியும்.

“விடாமுயற்சி” வரும் போது வரட்டும் அப்போ பாத்துக்கலாம். அதுவரை அடுத்த படத்தை பற்றி யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க அஜீத் ரசிகர்கள். ரெண்டு நாளுக்கு முன்னால அஜீத் திருப்பதி கோவில்ல சாமி தரிசனம் செய்த செய்தி பரவுச்சு. அதோட அவர் ரசிகரோட எடுத்துக்கிட்ட போட்டோவும் பரவுச்சு.
இன்னைக்கு வலைதளத்துல வைரல் எதுன்னு பாத்தா அஜீத் கிரிக்கெட் விளையாடுற போட்டோ தான். ஆடம்பரம் இல்லாம எப்பவும் போல ஒரு ஜீன்ஸ் பேன்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு கையில கிரிக்கெட் மட்டையை பிடித்து சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசுகிறார் அஜீத்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் எங்க தல மங்காத்தாவும் விளையாடுவாரு, கிரிக்கெட் மட்டையாலயும் விளையாடுவார்னு பெருமை பேசிக்கிட்டு வர்றாங்க. எது எப்படி இருந்தாலும் இதே மாதிரி விடாமுயற்சி ஷூட்டிங் விஷயத்திலும் அடிச்சு ஆடனும்னு நினைக்காங்க அஜீத் ஃபேன்ஸ்.








