---Advertisement---

அஜீத்தின் அடுத்த படம் எப்படி- இயக்குனர் ஹெச்.வினோத்

Published on: February 18, 2022
---Advertisement---

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களுக்கு பிறகு இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி இருக்கும் படம்தான் வலிமை.

இப்படம் வரும் 24ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத்தே இயக்குகிறார்.

ஏற்கனவே அஜீத்திடம் நெகட்டிவ் கேரக்டராக ஒரு கதையை இயக்குனர் ஹெச்.வினோத் சொல்லி இருக்கிறார் அந்த நேரத்தில் அந்த கதை வேண்டாம் பிங்க் படத்தை ரீமேக் செய்வோம் என அஜீத் சொல்லி இருக்கிறார்.

இப்போது வினோத்துடன் பணியாற்றுவது எளிதாக இருப்பதால் அடுத்த படத்தையும் வினோத் இயக்க அஜீத் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில் ஆரம்பத்தில் சொன்ன நெகட்டிவ் கதாபாத்திரம் மற்றும் ஏற்கனவே தயார் செய்திருந்த கதைகளை மிக்ஸ் செய்து அஜீத்துக்காக வினோத் கதை உருவாக்கி இருக்கிறாராம் அதைத்தான் அடுத்த படமாக இயக்க இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.