---Advertisement---

அடடே, ஆரம்பமே அசத்தலா இருக்கே! பாராட்டிய ரசிகர்கள்

Published on: April 7, 2020
Vanitha Youtube
---Advertisement---

என்னதான் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை குவித்தது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே கூறலாம். அவர் வேறு யாருமல்ல ரசிகர்களால் செல்லமான அக்காவான நம்ம வனிதா அக்கா தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகை வனிதா, அதே தொலைக்காட்சியில் சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருந்தார். இதனை தொடர்ந்து இவர் புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் என்ற யூடியூப் சேனலை தொடங்கி, அதில் முதல் எபிசொடேலே தமிழ் நாட்டுக்கே தண்ணி காட்டி இருக்கிறார் என்றுதான் சொல்லவேணும். அது என்னவென்றால் ஒட்டு மொத்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரொனாவை எப்படி விரட்டி அடிக்கலாம்? என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், அடடே, ஆரம்பமே அசத்தலா இருக்கே!, இனிமே தமிழ் நாட்டுக்கே தண்ணி தான், வாழ்த்துக்கள் அக்கா, என்று வழக்கம் போல கமெண்ட்ஸ்களை அள்ளி தெளித்து உள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.