---Advertisement---

என்னது நான் ரவுடியா?…வேண்டாம் சிரிச்சிருவாங்க!… பயந்த பாண்டியராஜன்…

Published on: April 16, 2024
miskin pandiyarajan
---Advertisement---

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் இயக்குனராகி, கதாநாயகன் ஆனவர் பாண்டியராஜன். கதாநாயகனகவும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். தமிழ் சினிமாவின் கதாநாயகர்களிலேயே ஒரு வித்தியாசமான தோற்றம் கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்.

இவரின் “ஆண்பாவம்” படம்  மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. பாண்டியன், வீ.கே.ராமசாமி, சீதா, ரேவதி உள்ளிட்டவர்களும் இதில் நடித்திருப்பர். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.

அனைத்திலும் இவர் கதாநாயகனாகவே நடித்தும், படங்களை இயக்கியும் வந்தார். “பாட்டி சொல்லை தட்டாதே”, “கதாநாயகன்”, “கோபாலா கோபாலா” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது  காமெடி, குணச்சித்திர வேடம் என அனைத்திலும் தனது திறமையை காட்டி வருகின்றார். மறைந்த கேப்டன் விஜயகாந்துடன் “எங்கள் அண்ணா” படத்தில் நகைச்சுவை கலந்த கதாபத்திரத்தில் நடித்திருப்பார்.

மிஷ்கின் இயக்கிய “அஞ்சாதே” படத்தில் பிரசன்னா வில்லனாக நடித்திருக்க, அவருடனே படம் முழுவதும் வந்திருப்பார் பாண்டியராஜன். படம் குறித்து முதலில் பேசும்பொழுது  நீங்கள் உங்களது மீசையை படத்திற்காக எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.

pandiarajan
pandiarajan

17 வயதிற்கு பிறகு நான் இன்று வரை மீசையை எடுத்தது இல்லை. என் முகம் பார்த்தால் எப்படி இருக்குமோ என  தெரியாது. நான் மீசை எடுத்து நடித்தால் அது நன்றாக இருக்காது என பாண்டியராஜன் முதலில் பயப்பட்டாராம்.

அதே போல இந்த படத்தில்  கொலைக்காட்சி ஒன்றும் உள்ளது, நீங்கள் தான் அதை செய்யப்போகின்றீர்கள்  என மிஷ்கின் சொல்ல பதறிப்போன பாண்டியராஜன் நானா? கொலை செய்வதா? எனக்கேட்டாராம்.

படம் வெளிவந்த பிறகு அது மிகப்பெரிய வெற்றி பெற படமானது. இயக்குனர் மிஷ்கினுக்கு மோதிரம் ஒன்றினை பரிசளித்து இருக்கிறார் பாண்டியராஜன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!

Official theatrical release banner for Nani's upcoming action drama The Paradise.

“தி பாரடைஸ்’ ரிலீஸ் அப்டேட்: இன்னும் 9 நாட்களில் திரைக்கு வரும் நானியின் மாஸ் படம்!