---Advertisement---

மோகன் நடிப்பில் இறுதியாக வந்த வெற்றிப்படம் இதுதான் – எத்தனை வருடம் ஆனாலும் சரியாமல் இருக்கும் மோகன் மார்க்கெட்

Published on: October 2, 2025
---Advertisement---

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய ஹீரோவாக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் மோகன். மோகனின் படங்கள் ஓடுவதை பார்த்து, இவரின் மாநிலத்துக்காரரான ரஜினிகாந்தே ஆச்சரியப்பட்டதாகவும், மோகன், ராமராஜன் இவர்கள் எல்லாம் இப்படி தொடர் வெற்றி பெற்றால் நான் பெங்களூருக்கே செல்ல வேண்டியதுதான் என ரஜினி அந்த நாட்களில் விளையாட்டாக சொன்னார் என சொல்வதுண்டு.

மோகனின் படம் வெள்ளிக்கிழமை தோறும் அன்லிமிட்டெட் ஆக வாரா வாரம் ஆரவராமாக ரிலீஸ் ஆகி கொண்டே இருந்தது. மோகனை பார்க்க , மோகன் நீண்ட காலம் நிலையாக தங்கி இருந்த பாம்குரோவ் ஹோட்டலில் வரிசையாக தயாரிப்பாளர்கள் சூட்கேஸ்களுடன் நிற்பார்கள் என சொல்வதுண்டு.

 

ஜாக்பாட் குதிரையாக விளங்கிய மோகனை வைத்து படம் தயாரித்தால் படம் வெற்றி என்ற நிலை அப்போது நிலவியது. மெளன ராகம், மெல்ல திறந்தது கதவு, பிள்ளை நிலா, உதயகீதம், இதயக்கோவில், தீர்த்தக்கரையினிலே என  இன்னும் பல பெயர் தெரியாத எண்ணற்ற படங்களில் நடித்து வந்த மோகனுக்கு எனக்கு தெரிந்து 1988ல் வந்த பாசப்பறவைகள் படமே கடைசி வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் வசனங்களால் காட்சிகளால், பாடல்களால் இந்த படம் புகழ்பெற்றது.

இதன் பிறகு மோகன் ஜகதலப்பிரதாபன், உருவம் என பேசி நடித்திருந்தாலும் அவை பெரிய வெற்றி பெறவில்லை, 90களின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மோகன் நடிக்கவே இல்லை, அதன் பிறகு 99ல் அன்புள்ள காதலுக்கு அதன் பிறகு 10 வருடம் கழித்து சுட்டபழம் , அதன் பிறகு 15 வருடம் கழித்து ஹரா ,கோட் படங்களில் நடித்தாலும் அவை பெரிய உயரத்தை அவருக்கு கொடுக்கவில்லை, ஆனால் மோகனின் ஆரம்ப கால உயரம் அப்படியே இருக்கிறது.