---Advertisement---

அஜீத் இல்லேன்னா அருண்விஜய் இல்லையாம்!…விட்டுக்கொடுக்காத விஜயகுமார்…அப்படி என்னதான் நடந்துச்சோ?…

Published on: April 21, 2024
vijayakumar ajith
---Advertisement---

குணச்சித்திர நடிகர்களில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருபவர் விஜயகுமார். இவரது குடும்பமே கலைத்துறையோடு அதிக தொடர்புடையது. இவரது வாரிசுகளான வனிதா, கவிதா, ஸ்ரீதேவி ஆகியோர் தமிழ்படங்களில் கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள்.

விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா, எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர்.
இவர்களது மகன் அருண்குமார் “ப்ரியம்” படத்தின் மூலம் தமிழ் சினிமவில் காலடி எடுத்து வைத்தார்.

விஜயகுமாருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு அருண் குமாருக்கு கிடைக்க வில்லை என்றாலும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து கொண்டிருந்தார். அருண் விஜயாக தனது பெயரை மாற்றிக்கொண்டு தற்பொழுது நடித்து வருகிறார்.

ajith arun
ajith arun

கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வில்லனாக நடித்தார் அருண்விஜய். இந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்ததாக  சொல்லப்பட்டது.

விக்டராக படத்தில் வந்திருந்த இவருக்கு அஜீத்ற்கு இணையான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. தனக்காக அருண்விஜய் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டாம் என்றும்,

உங்களது விருப்பபடியே இயக்குங்கள்,என் தலையீடு  இருக்காது என அஜீத் சொல்லியதாலே தான் அருண் விஜய்க்கு பெயர் கிடைத்தது.

எந்த ஒரு மாஸ் நடிகரும் வளர்ந்து வரும் நடிகருக்கு இப்படி ஒரு அங்கீகாரத்தை வழங்க மாட்டார்கள். ஆனால் அந்த விஷயத்தில் அஜீத்குமார் மாறுபட்டிருந்தார் என அருண் விஜயின் தந்தையான விஜயகுமார் சொல்லியிருந்தார்.

அஜீத்துடன்”வில்லன்”, “ஜி”, “ஆனந்த பூங்காற்றே”, “நீ வருவாய் என”  படங்களில் நடித்துள்ளார் விஜயகுமார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!