---Advertisement---

முடியலேன்னா விட்டுட்டு போங்க…ஆட்சியாளர்கள் மீது கோபத்தை கொப்பளித்த ரஞ்சித்…

Published on: June 23, 2024
ranjith
---Advertisement---

“நேசம் புதுசு”, “நினைவிருக்கும் வரை”, “நட்புக்காக” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஞ்சித். “நேசம் புதுசு” படத்தில் தன்னுடன் நடித்த பிரியாராமனை காதலித்து மணமுடித்தார். சில காலமாகவே தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் ஏதுமின்றி இருந்து வருகிறார் ரஞ்சித்.

“கவுண்டம்பாளையம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. படம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் ரஞ்சித். அப்போது கள்ளக்குறிச்சி விஷசாராயம் குறித்த கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்தார்.

ranjith priya raman
ranjith priya raman

இது போன்ற கள்ளச்சாராய விற்பனை அரசியல் வாதிகளுக்கு தெரியாமல் நடப்பதில்லை. இது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்தே தான் நடக்கிறது என தனது குற்றச்சாட்டின முன்வைத்தார்.

ஆட்சியாளர்கள் என்பவர்கள் அப்பா, அம்மா மாதிரியானவர்கள். மக்களுக்கு எது தேவையோ அதை தான் கொடுக்க வேண்டும்.

அவர்களை பாதிக்கும் விஷயங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்படி எடுக்க முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டு இறங்கி விட வேண்டியது தான் என காட்டமாக சொன்னார் ரஞ்சித்.

அதோடு கள்ளச்சாராயம் உடனடியாக உயிர் பலி வாங்கக்கூடிய விஷம். ஆனால் மதுபானங்கள் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லக்கூடிய ஸ்லோ பாய்ஸன். யாராலேயும் கள்ளசாராயத்தை ஒழிக்க முடியாது. எந்த ஆட்சி வந்தாலும் இது தான் நிலை என தனது கோபத்தை கொப்பளித்தார்.

ப்ளாஸ்டிக் தடையைக்கூட முழுமைப்படுத்த முடியவவில்லை, இதில் எப்படி சாராய விற்பனையை தடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதோடு தனது “கவுண்டம்பாளையம்” படத்தினை எடுக்க விடாமல் கடுமையான எதிர்ப்புகளும், தடைகளும் வந்தது. ஆனால் அதை எல்லாம் மீறி தான் படம் வெளியிடும் வரை வளர்ந்துள்ளது என சொன்னார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!