---Advertisement---

சித்தார்த் அபிமன்யுவாக அஜித்! தனி ஒருவனின் இயக்குனர் பகிர்ந்த ரகசியம்!

By Sri
Published on: April 9, 2020
---Advertisement---

தனி ஒருவனில் அரவிந்த்சாமி நடித்திருந்த சித்தார்த் அபிமன்யுவின் கதாபாத்திரத்தில் நடிக்க அஜித்தான் முதல் தேர்வாக இருந்தார் என இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

‘ஜெயம்’ படம் மூலம் தமிழில் இயக்குனராக ராஜா வரிசையாக ரீமேக் படங்களாக இயக்கியதால் ஒரு கட்டத்தில் ரீமேக் ராஜா என்ற ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார். ஆனால் அவர் இயக்கிய தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவரைத் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாற்றியது.

அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெயம்ரவியை பாராட்டுகளைப் பெற்றது வில்லனாக நடித்த அரவிந்த் சாமிதான். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரம் இன்றும் தமிழ் சினிமாவின் வில்லன் கதாபாத்திரங்களில் சிறந்த ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படம்தான் அரவிந்த் சாமிக்கு ரீ எண்ட்ரியாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த இயக்குனர் மோகன் ராஜா ‘முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அஜித்தைதான் நினைத்து இருந்தேன். எல்லோரும் அவர் சிறப்பாக பொருந்துவார் எனக் கூறினர். ஆனால் என்னால் அதை செயல்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் சுதீப் மற்றும் மேலும் சில நடிகர்கள் கூட மனதில் வந்தனர்’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Collage of Vijay Deverakonda's upcoming movies including Ranabaali and the new film with Shouryuv.

விஜய் தேவரகொண்டா – ஷௌர்யுவ் கூட்டணி: “ஹாய் நான்னா” இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட ஆக்ஷன் வேட்டை; ரசிகர்கள் உற்சாகம்!

Director K.S. Ravikumar and Actor Dhanush in a still from their upcoming movie Kara.

Dhanush – KSR : “தனுஷுடன் பண்ண வேண்டிய அந்த படம் ஏன் நின்றது?” – கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்த சுவாரஸ்யமான பிளாஷ்பேக்!

Actor and Director Joju George at the pooja ceremony of his second directorial Paripadi with music by Yuvan Shankar Raja.

Joju George’s Paripadi : “ஜோஜு ஜார்ஜ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி” – மிரட்டலான அறிவிப்புடன் வெளியான ‘பரிபாடி’; மலையாளத்தில் தடம் பதிக்கும் யுவன்!

Sundeep Kishen celebrating 16 years in the film industry with the announcement of Powerpeta.

Powerpeta Title Look : செஸ் போர்டு, ரத்தம் தெறிக்கும் ரோஜா – சந்தீப் கிஷனின் மிரட்டலான ‘பவர்பேட்டா’!

Posters of upcoming unique Tamil movies JanaNayagan, Karuppu, Kara, and Mr. X.

2026 Kollywood Lineup : மிஸ்டர் எக்ஸ் முதல் ஜனநாயகன் வரை – நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத படங்கள்!

Actor Pavish from Dhanush's directorial NEEK.

NEEK Star Pavish Next: தனுஷ் அறிமுகப்படுத்திய பாவிஷ் – ‘ஈட்டி’ இயக்குநருடன் புதிய கூட்டணி!