---Advertisement---

தனுஷுக்கு என்னால் தீனி போடமுடியவில்லை –ஒப்புக்கொண்ட முன்னணி இயக்குனர் !

By Sri
Published on: March 14, 2020
---Advertisement---

இயக்குனர் பிரபுசாலமன் தான் இயக்கிய தொடரி படம் சரியாக ஓடாதது குறித்து பேசியுள்ளார்.

இயக்குனர் பிரபுசாலமன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் என்பதை தான் இயக்கிய மைனா, கும்கி ஆகிய படங்களின் மூலம் நிரூபித்தவர். ஆனால் அதன் பின் அவர் இயக்கிய கயல் மற்றும் தொடரி ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் இப்போது காடுகளைப் பற்றி அவர் எடுத்துள்ள திரைப்படம் மூன்று மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் ஆனந்த விகடன் நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் தனுஷுடனான தொடரி படம் ஏன் சரியாக ஓடவில்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘அந்தக் கதையை நான் தனுஷுக்குனு பண்ணல. அக்டோபர் ஷூட்டிங் போலாம்னு இருந்தோம். ஜூலையில ஷூட்டிங் போக வேண்டிய கட்டாயம். அதனால நல்லா டீடெயிலிங் பண்ணமுடியலை. தனுஷ் எனக்கு அவ்ளோ சப்போர்டா இருந்தார். ஆனா, அவர் நடிப்புக்கு என்னால அந்தப் படத்துல சரியா தீனி போடமுடியல. டீயெலிங் பண்ணாம, விஷுவல் எஃபெக்ட்ஸை மட்டும் நம்பிப் போகக்கூடாதுனு கத்துக்கிட்டேன். எல்லா இயக்குநர்களும் இந்த மாதிரி சூழலைக் கடந்துபோவாங்க. இந்தக் கதையை இந்தப் பூனையை வெச்சுதான் பண்ணணும்னா அதுதான் பண்ணனும்னு புரிஞ்சுகிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.