சாக்க்ஷி அகர்வால் – தமிழ் மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்தாலும் இவர் பெருமளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய காரணம் என்னவோ தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன்3 என்றே கூறலாம்.
பிக்பாஸ் சீசன்3க்கு பின்பு இவருக்கு ஏதிர்பார்த்த அளவிற்கு படங்கள் அமையவில்லை என்றாலும் ரசிகர்கள் இவரை மறவாமல் இருக்க அவ்வப்போது தன் அன்றாட நிகழ்வுகளை வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் சிலம்பத்தை ஒற்றை கையால் சுற்றுவதை விடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/p/B9n6w-DAaFF/?utm_source=ig_embed&utm_campaign=loading








