தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடிப்பில், இயக்குநர் ரவிந்திர புல்லே (Ravindra Pulle) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இசையமைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் (Teaser) விரைவில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிரட்டலான ஆக்ஷன் மற்றும் வைப் நிறைந்த இந்த டீசர் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.













