---Advertisement---

இணையத்தில் கிண்டல் செய்த நெட்டிசன்கள் – சீனாவில் விசித்திரமாக சாதனை படைத்த அனிமேஷன் படம்!

Published on: August 19, 2026
Promotional graphic for the viral Chinese animated movie Niu Lai.
---Advertisement---

சினிமா உலகில் எப்போது என்ன நடக்கும் என்றே கணிக்க முடியாது என்பதற்குச் சிறந்த உதாரணமாகச் சீனாவுலிருந்து ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. அடிப்படை 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில், பார்க்கவே விசித்திரமாகவும் சற்று வித்தியாசமாகவும் உருவாக்கப்பட்ட ‘Niu Lai’ என்ற குறைந்த பட்ஜெட் அனிமேஷன் படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

சுமார் 5 ஆண்டுகள் உழைப்பில் உருவானதாகக் கூறப்படும் இப்படத்தை இயக்குநர் சின் யூமெங் மற்றும் அவரது தாய் சன் லிஃபான் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இப்படம் வெளியான முதல் 10 நாட்களில் படுதோல்வியைச் சந்தித்தது. சில நாட்களில் வெறும் 200 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2,400) மட்டுமே வசூலாகி தியேட்டர்களில் முடங்கியது. ஆனால், சோபாவில் அமர்ந்து கொண்டு நண்பர்களைக் கேலி செய்ய நினைத்த இளைஞர்கள் மற்றும் நெட்டிசன்களின் வரவால் நிலைமை முற்றிலுமாக மாறியது.

சமூக வலைதளங்களில் இப்படம் குறித்து வெளியான மோசமான மற்றும் கிண்டலான விமர்சனங்களே இதன் மிகப்பெரிய பலமாக மாறின. “நம்ப முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது”, “இணைய ட்ரால் கலாச்சாரத்தின் உச்சம்” என நெட்டிசன்கள் இப்படத்தைக் கலாய்த்துத் தள்ளினர். இருப்பினும், இந்த விசித்திரமான விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட சினிமா ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.

இதன் விளைவாக, படத்தின் வசூல் மளமளவென உயர்ந்து தற்போது சுமார் 17.1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கும் அதிகம்) வசூலைக் குவித்து பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகிறது. பார்வைக்கு விசித்திரமாக இருந்தாலும், இது போன்று இணையத்தில் வைரலாகும் மீம்களும், விமரிசனங்களும் ஒரு சாதாரண படத்திற்கு எத்தகைய கோடிகளைப் பெற்றுத் தரும் என்பதற்கு இப்படத்தின் வெற்றியே சாட்சியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!