தமிழ் திரையுலகின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படம் ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ (SlumDog: 33 Temple Road).
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் துனியா விஜய் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார்.
FEARLESS. POWERFUL. COURAGEOUS 💥
Meet THE GEM OF INDIAN CINEMA, #TABU as “GAURI HEGDE” from #SlumDog – 33 Temple Road❤️🔥
Glimpse out now 🔥
— https://t.co/86pT3sIamDA #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥
Produced by Puri Jagannadh, Charmme Kaur, JB NarayanRao… pic.twitter.com/NB1xgCzqyB— UV Communications (@UVCommunication) August 10, 2026
இந்நிலையில், இப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை தபுவின் (Tabu) கதாபாத்திர அறிமுக கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கௌரி ஹெக்டே (Gawri Hegde) என்ற பெயரைக் கொண்ட கண்டிப்பான மற்றும் பயமற்ற காவல் துறை அதிகாரியாக தபு நடித்துள்ளார். பூரி ஜெகநாத்தின் தனித்துவமான மேக்கிங் பாணியில் தபுவின் தோற்றமும் அவரது கெத்தான நடிப்புத் திறனும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘புரி கனெக்ட்ஸ்’ மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.













