---Advertisement---

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!

Published on: June 19, 2026
Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.
---Advertisement---

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையும், அவனி சினிமாக்ஸ் மற்றும் அவனி மூவிஸ் (Avni Cinemax / Avni Movies) நிறுவனங்களின் தயாரிப்பாளருமான குஷ்பூ சுந்தர், தங்களது தயாரிப்பில் வெளியாகி தியேட்டர்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் புதிய திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழாவில் (Success Meet) கலந்து கொண்டு மிகவும் எமோஷனலாகப் பேசியுள்ளார். பல சிறிய போராட்டங்களுக்குப் பிறகு தியேட்டர்களில் முற்றிலும் ஒரு புதிய ஃபார்முலாவில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த வெற்றியின் ஒட்டுமொத்த பெருமையும் திரைமறைவில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கே சேரும் என்று குஷ்பூ பெருமையோடு மேடையில் அறிவித்தார்.

இந்த பிரஸ் மீட்டில் பேசிய குஷ்பூ, தற்பொழுது தனது மூத்த மகள் அனந்திக்கு (Anandita) திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், ‘வீடு கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த வேலைகளில் முழுமையாக பிஸியாக இருந்ததால் தனக்குச் சரியான தூக்கம் கூட இல்லை என்றும் குறிப்பிட்டார். இதனால் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கான ஒரு துளி கிரெடிட்டைக் கூட தான் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், மேடையில் இருக்கும் ஒட்டுமொத்த டீம் மற்றும் திரைமறைவில் இருந்த உழைத்தவர்களுக்கே இந்த வெற்றி சொந்தம் என்றும் பெருந்தன்மையுடன் கூறினார்.

தொடர்ந்து தனது இளைய மகள் அனி குறித்துப் பேசிய குஷ்பூ, வீட்டில் எல்லாரும் அவளை அனி பாப்பா என்று அழைத்தாலும், தனக்கு அவள் எப்போதுமே ஒரு ‘பொம்மை’ தான் என்று நெகிழ்ந்தார். ஒவ்வொரு தாய்க்கும் இருக்கும் அதே ஃபீலிங் தனக்கும் இருப்பதாகக் கூறிய அவர், பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களைக் கல்யாணம் செய்து கொடுத்துக் கரை சேர்ப்பது மட்டும் ஒரு தாயின் கடமை அல்ல என்றும், அவர்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக (Financially Independent) இருக்க வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், இந்த உலகத்தில் யாருக்கும் அவர்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதை உணர்த்த வேண்டும் என்றும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

அந்த வகையில், மூத்த மகள் அனந்திக்குத் திருமணம் நடக்கவிருந்தாலும், அவள் ஏற்கனவே இரண்டு படங்களில் கமிட்டாகி தற்பொழுது மேலும் நான்கு படங்களில் ஒப்பந்தமாகி வருவதாகவும், காலம் தற்பொழுது முற்றிலும் மாறிவிட்டதாகவும் கூறினார். தங்களது காலத்தில் காதல், கல்யாணம் என்றால் வெளியில் சொல்ல பயந்த சூழ்நிலை மாறி தற்பொழுது புதிய உலகம் உருவாகியுள்ளதாகவும், அந்த புதிய உலகிற்கு ஏற்ப நாமும் மனப்பக்குவத்துடன் வளர்ந்துAcceptance மோடுக்கு வந்துள்ளோம் என்றும் குஷ்பூ சுந்தர் கூறினார். தியேட்டர்களுக்குச் சென்று இதுவரை பார்த்திராத ஒரு புதுமையான உலகத்தை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்த ரசிகர்களுக்கும், படத்தின் வெற்றிக்குக் காரணமான அருண்குமார் சார், ஏ.சி. சண்முகம் சார், மதன் சார் மற்றும் அவனி டீமிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட குஷ்பூவின் இந்த உருக்கமான மேடைப் பேச்சு சினிமா செய்திகள் தற்பொழுது சோசியல் மீடியாக்களில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!