தென்னிந்திய சினிமாவில் ஒரு சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரிலீஸாகும் முதல் நாளிலேயே தியேட்டர்களில் திருவிழா போன்ற கொண்டாட்டங்களும், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளும் நிகழும். அந்த வகையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் பெத்தி (Peddi) திரைப்படம் நேற்று உலகெங்கும் உள்ள தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸானது. இப்போ இந்த படத்தோட முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரம் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்துள்ளது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் 1980களில் நடக்கும் ஒரு எமோஷனலான ஸ்போர்ட்ஸ் டிராமா கதைக் களத்தைக் கொண்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், ரசிகர்களின் பேராதரவோடு முதல் நாளிலேயே உலகளவில் 112 கோடி முதல் 135 கோடி வரை பிரம்மாண்டமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரிலீஸான முதல் நாளே 100 கோடி கிளப்பில் இணைந்த மிகச்சில தெலுங்கு திரைப்படங்களின் வரிசையில் பெத்தி தற்பொழுது இணைந்துள்ளது.
View this post on Instagram
இந்தியாவில் மட்டும் இந்த படம் முதல் நாளில் சுமார் 82 கோடிக்கும் மேல் மொத்த வசூல் (Gross) சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தியேட்டர்களில் எங்கு பார்த்தாலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி இந்த படம் வசூலை வாரிக் குவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், வெளிநாட்டு சந்தைகளிலும் (Overseas) ராம் சரணின் அசாத்திய ஸ்டார் பவரால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.













