---Advertisement---

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

By Sri
Published on: June 4, 2026
Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.
---Advertisement---

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் எப்போதுமே ஒரு முக்கியமான படம் ரிலீஸானாலோ அல்லது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விசேஷம் என்றாலோ திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் தனது புதிய திரைப்படமான பெத்தி படத்தின் அசுர வெற்றிக்காக அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது குறித்து நடிகை ஜான்வி கபூர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். திருப்பதி திருமலையில் ஏழுமலையானின் ஆசீர்வாதத்தைப் பெற்றதில் தொடங்கி தற்பொழுது தியேட்டர்களில் தங்களது பெத்தி திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் பேராதரவையும் அன்பையும் பார்ப்பது வரை எல்லாமே “திருப்பதி பாலாஜியின் ஆசீர்வாதம்” இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரம்மாண்டமான வெற்றிக்காகவும் ரசிகர்கள் காட்டும் அளவற்ற அன்புக்காகவும் தான் எப்போதும் கடமைப்பட்டிருப்பதாக ஜான்வி கபூர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பெத்தி திரைப்படத்தில் ஜான்வி கபூரின் நடிப்பு தற்பொழுது சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு வரும் வேளையில் அவரின் இந்த லேட்டஸ்ட் ஆன்மீகப் பயணம் மற்றும் நன்றிப் பதிவு தற்பொழுது இணையத்தில் செம வைரலாகப் பரவி வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!