---Advertisement---

Swathi Reddy’s Bold Marriage Comment! — “கல்யாணம் பண்ணி நிம்மதியை இழக்கரதவிட — நாய் வளர்ப்பதே பெட்டர்!”; ஓப்பனாகப் பேசிய சுவாதி ரெட்டி!

Published on: May 25, 2026
Actress Swathi Reddy sharing her thoughts and personal opinions about marriage and relationships in a recent interview.
---Advertisement---

தமிழ் திரையுலகில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர் தான் நடிகை சுவாதி ரெட்டி (Swathi Reddy).

எப்போதுமே வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரோட எதார்த்தமான பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கு. இந்த நிலையில, தற்போதைய காலகட்டத்துல இருக்குற திருமண வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்து சுவாதி ரெட்டி பேசியுள்ள ஒரு அதிரடி கருத்து சோசியல் மீடியா முழுக்க இப்போ செம ட்ரெண்டாகி பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

தனது திருமண வாழ்க்கை மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்து ஓப்பனாகப் பேசிய சுவாதி, “இந்த காலத்துல ஒருத்தரை முழுமையா நம்பி, கல்யாணம் செஞ்சுக்கிட்டு, அவங்களோட வாழ்நாள் முழுக்க ஒண்ணா சேர்ந்து வாழ்றதுங்குறது ரொம்பவே கஷ்டமான ஒரு விஷயமா மாறிடுச்சு” அப்படின்னு சொல்லியிருக்காங்க. இப்போ இருக்குற யாருக்கும் யாருமே விட்டுக்கொடுத்துப் போறதுக்கோ அல்லது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கோ கொஞ்சம் கூட பொறுமை இல்லைன்னு சுவாதி வருத்தத்தோடு சுட்டிக்காட்டியிருக்காங்க.

Actress Swathi Reddy and director-actor M. Sasikumar in a classic cinematic scene from the blockbuster Tamil retro drama film Subramaniapuram.
மறக்க முடியாத காம்போ: சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி காலத்தைக் கடந்து இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழும் ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தில் நடிகை சுவாதி ரெட்டி!

மேலும் பேசிய சுவாதி, “யாரையாச்சும் ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு தினமும் நம்மளோட மனநிம்மதியை இழக்குறதுக்கு.. வீட்ல ஒரு நாய்க்குட்டியை வளர்த்துட்டு ரொம்ப சந்தோஷமா இருக்குறது எவ்வளவோ மேலானது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். நாய் எப்போதுமே நமக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும், அதுமட்டுமில்லாம எந்தவொரு நிபந்தனையும் இல்லாம நம்ம மேல எப்போதுமே பாசத்தை மட்டுமே பொழியும்னு சுவாதி ரெட்டி ரொம்பவே எதார்த்தமா பேசியிருக்காங்க. ஒரு மனிதனை நம்பி ஏமாறுவதை விட நாய் வளர்ப்பதே நிம்மதி என்கிற அவரோட இந்த பேச்சு இப்போ நெட்டிசன்கள் மத்தியில பயங்கரமா பேசப்பட்டு வருது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மெலடி கிங் ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல இன்னைக்கு ஒரு மரண வெயிட்டிங் லவ் சாங் வருது... டைம் நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

சுவாதி ரெட்டியோட இந்த போல்டான ஸ்டேட்மெண்ட்க்கு, சிலர் அவரோட கருத்துக்கு ஆதரவாக கமெண்ட் செஞ்சுட்டு வர்றாங்க, இன்னும் சிலர் தற்போதைய காலத்து வாழ்க்கை முறைக்கு இதுதான் உண்மை அப்படின்னும் பேசி வர்றாங்க. நடிகை சுவாதி ரெட்டியோட இந்த லேட்டஸ்ட் வைரல் இன்டர்வியூ தான் இப்போ கோலிவுட் ஏரியாவுல டாப் ட்ரெண்டிங் நியூஸா போயிட்டு இருக்கு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?