இன்றும் நாம் நினைக்கும் நல்ல விசயங்களுக்காக கொஞ்சம் டைம் மிஷின்ல ஏறி காலம் கடந்து 1980களுக்கு சென்றால் பாரதிராஜாவின் இனிய படங்கள் தான் நியாபகம் வரும்.
சினிமா செட்டுக்குள் எடுத்துக்கொண்டிருந்த படப்பிடிப்பை மாற்றி, வெளியோ பொள்ளாச்சி, காரைக்குடி, தூத்துக்குடி என இயற்கையாக படப்பிடிப்பை நடத்தி , தமிழ்நாட்டின் அப்பாவி கிராம மக்களையும் அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அப்படியே காண்பித்தவர்.
அந்த கால கிராம மக்களின் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து புதிய வார்ப்புகள், முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள், கடலோர கவிதைகள், புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என பல அற்புத படங்களை கொடுத்தவர், ஏதாவது துன்பம் என்றால் இவர் இயக்கிய பழைய படங்களை சென்று பார்த்தாலே நம் துன்பம் எல்லாம் மறைந்து விடும் அந்த அளவு இனிய படங்களை கொடுத்தவர், யாரோடு இசைக்கூட்டணி அமைத்தாலும் பாடல்களையும் சிறப்பாக கொடுத்து இன்று வரை நம் சோகங்களுக்கு மருந்து போடுபவராக உள்ளார்.
இருப்பினும் நம் சோகங்களுக்கு மருந்து போட்டார் இவர் சோகத்துக்கு யார் மருந்து போடுவார் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது, இவரது மகன் மனோஜ் 5 மாதம் முன் மறைந்ததில் இருந்து இவரும் மிகுந்த சோகத்தில் இருக்கிறாராம். இவரது தம்பி ஜெயராஜின் மகள், மலேசியாவுக்கு வாங்க என இவரை அழைத்து சென்று மலேசியாவை காட்டி இவரது சோகத்தை மாற்ற முயற்சி செய்தாராம், ஆனால் எதுவும் முடியவில்லையாம், அதை விட்டு வெளியில் வர முடியவில்லை என இவர் சகோதரர் கூறுகிறார்.
உண்மையில் புத்திர சோகம் என்பது கொடுமையானது தான். என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல என இவர் படத்து பாடல்தான் நியாபகம் வருகிறது.









