முற்பிறவியில் ஷசாங்கன் என்ற கொ.. கொள்ளை செய்யும் நபராக நாசர் நடித்த படம், கொடூரனாக இவர் இருந்த நேரத்தில் , தன்னால் பிடிக்கப்பட்டவர்களில் ஒருவரான தேவி என்பவரின் மகளை காதலிக்கிறார் நாசர், ஆனால் அவரோ அவரை வெறுக்க தற்கொலை செய்து கொள்கிறார் நாசர்.

மறுபிறவியில் முன் ஜென்மத்தில் காதலித்த கீர்த்தி ரெட்டி துபாயில் பிறந்து கல்யாணத்திற்கு தயாராகி வரும் நேரத்தில் காதலன் வினீத் இருக்கும் நேரத்தில், முன் ஜென்ம காதலனான நாசர் மறுபிறவி எடுத்து அவர் இருக்கும் இடம் தேடி வருகிறார். நாசர் இயக்கி இருந்த இந்த படம் கொஞ்சம் சுமாராக ஓடிய படமாகும்.
இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தன, குறிப்பாக தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம், நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பெளர்ணமி, க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் ஒரு நாள் அந்த ஒரு நாள் போன்ற பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தன.
இந்த படம் அமெரிக்காவில் 1992ல் வெளியாகிய ப்ராம் ஸ்ட்ரோக்கர் ட்ராகுலா என்ற படத்தை தழுவி வந்த படமாகும். பாஸிட்டிவாக மக்களிடம் வரவேற்பு பெற்ற படம்தான் இருப்பினும் பெரிய வரவேற்பை இப்படம் பெறவில்லை.









