---Advertisement---

வயசான என்ன..? Lion is always Lion… அதிரடி ஆக்சன்களுடன் வெளியான GOAT பட ட்ரெய்லர்…!

By Sri
Published on: August 17, 2024
---Advertisement---

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

மேலும் நடிகர் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா  இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாகும் என கூறப்படுகின்றது.

படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கின்றது. திரைப்படம் ஒரு பக்கம் ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக அமைந்திருக்கின்றது. மேலும் ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் அசத்தலாக இருக்கின்றது. விஜயின் மகனாக வரும் இளைய தளபதி விஜய் கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ட்ரெய்லரின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.