---Advertisement---

இனிதே நடந்து முடிந்தது நாகசைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம்.. வைரலாகும் புகைப்படங்கள்…!

By Sri
Published on: August 8, 2024
---Advertisement---

நாகசைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்ததாக அவரது தந்தை நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நாகார்ஜுனா. இவரின் மகனும் நடிகருமான நாகசைய்தன்யா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வளம் வருகிறார். தெலுங்கில் ஏ மாய சேஷாவோ, மனம், லவ் ஸ்டோரி, மஜ்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபலமாக இருக்கின்றார்.

இவர் நடிகை சமந்தாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருடங்களில் சமந்தாவும் நாகசைய்தன்யாவும் பிரிவதாக விவாகரத்து அறிவித்தனர்.

அதன்பிறகு கடந்த சில மாதங்களாக நாகசைய்தன்யா பிரபல நடிகையான சோபிதா துளிபாலாவை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. இவர் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமாக இருக்கின்றார்.

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். இருவரும் நிச்சயதார்த்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையாக நாகார்ஜுனா புகைப்படத்துடன் தனது எக்ஸ் தள  பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துளிபாலாவுக்கும் இன்று காலை 9 40 திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். சோபிதாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி.. அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று நாகசைய்தன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றார் நாகார்ஜுனா.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.