---Advertisement---

தயவுசெய்து இந்த தகவலை நம்பாதீங்க… லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு…!

By Sri
Published on: August 8, 2024
---Advertisement---

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரிப்பதில் பெரும் பங்கு வகிப்பது லைக்கா நிறுவனம். பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றது. இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று லைக்கா நிறுவனம் தற்போது அறிவிப்பை தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “லைக்கா ப்ரொடக்ஷனில் நடிக்க வாய்ப்பு தருவதாக பலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைப்புகளை விடுப்பது எங்கள் கவனத்திற்கு தற்போது வந்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அல்லது ஆடிஷன் பற்றிய அறிவிப்புக்கள் எங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் மட்டுமே வெளியாகும்.

அதை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும். நாங்கள் அறிவிக்காத ஆடிஷன் மற்றும் வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை தவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக மேற்கொள்ளப்படும் கேஸ்டிங் அழைப்புகள் மற்றும் ஆடிஷன்களுக்கு அழைப்பு விடுக்கும் மூன்றாம் தரப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Indian Government Investigates Uber and Ola Over Device-Based Pricing Allegations

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.