---Advertisement---

ஆளை விடுங்கப்பா…அமெரிக்காவிற்கு பறக்க தயாராகி வரும் கமல்?…

Published on: July 15, 2024
kamal
---Advertisement---

“இந்தியன் – 2″வை  தீபாவளி பண்டிகையை போல உற்சாகமாக கொண்டாடலாம் என நினைத்த தமிழ் ரசிகர்களுக்கு கடைசியில் அது தீபாவளிக்கு விடும் புஸ்வானமாக மாறி அதிர்ச்சி கொடுத்து விட்டது. ஷங்கர் இயக்கிய படங்கள் எதுவும் இதுவரை வணிக ரீதியான தோல்வியை சந்திததே இல்லை என்ற வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளது “இந்தியன் – 2”,  ஷங்கர் – கமல் காம்போ அதிகம் எதிர்பார்க்கப்பட்டது நேரத்தில்.

படத்தின் நீளம் தான் தோல்விக்கு காரணம் என நினைக்கப்பட்டதால் பதினைந்து நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் படம் எப்படி இதுவரை வாங்கிய நெகட்டிவ் விமர்சனகளிலிருந்து மீண்டு வரும் என்பது இப்போது வரை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

ஷங்கர் தனது வாழ்நாளில் இனி இப்படிப்பட்ட கமென்ட்ஸ்களை கேட்டு விடக்கூடாது என அவரின் தீவிர ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

kamalhaasan
kamalhaasan

படத்தில் கமலின் நடிப்பும் கூட நெகட்டிவ் விமர்சனங்களையே வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டு வரும் போதும் கமல்ஹாசன் மணிரத்னத்தின் “தக்-லைஃப்” படத்தின் ஷூட்டிங்கில் படு பிசியாக இருந்து வருகிறார்.

இப்போதெல்லாம் கமலை எங்கே பார்த்தாலும் தலையில் தொப்பியோடு தான் பார்க்க முடிகிறது. “தக் – லைஃப்” படத்தில் கமலின் கெட்-டப் தெரிந்து விடக்கூடாது என தான் இப்படி தனது தலையை தொப்பியை வைத்து மறைத்தே வலம் வருகிறார் என லீக் ஆகியுள்ளது புது இன்ஃபர்மேசன்.

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளைப் பற்றி எல்லாம் கவலை படாமல் புதுமையை புகுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுபவர் கமல். இதனால் தான் இவரை கலைஞானி என்று கூட அழைப்பார்கள் அவரது ரசிகர்கள்.

சமீபத்தில் அதிகமாக பிரபலமாகி வருவது ஏஐ டெக்னாலஜி. இந்த நவீன தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்வதற்காக கமல் அமெரிக்காவிற்கு பறக்க ப்ளான் பண்ணியிருக்கிறாராம். தமிழ் சினிமா ஆடியன்ஸ் அடுத்த லேடஸ்ட் டெக்னாலஜியை பார்க்க தயாராக விட வேண்டியது தான் போல.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!

A collection of candid and charismatic high-definition photos of actor Sivakarthikeyan from recent public events and film promotions.

SK-RKFI Update: “65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!” சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?

Actor Yash's official look from Toxic movie with the announcement of the release date postponement.

Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?

Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.

Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!

TVK President Vijay offering prayers and touching the feet of Shirdi Sai Baba in Maharashtra ahead of election results.

Vijay in Shirdi: “முருகன் தரிசனம் முடித்து சாய்பாபா பாதம் தொட்டு வழிபாடு!” ஆன்மீகப் பயணத்தில் த.வெ.க தலைவர் விஜய்.. வைரலாகும் சீரடி புகைப்படங்கள்!