---Advertisement---

ரிவர்ஸ் கியர் போடப்போகிறாரா ஷங்கர்?…பிரம்மாண்ட இயக்குனரையே பதம் பார்த்துட்டே இந்த பிக்சர்!…

Published on: July 13, 2024
Shankar
---Advertisement---

எங்கே பார்த்தாலும் இப்போதைய பேச்சு எதை பற்றி என்று பார்த்தால் அது நிச்சயம் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள “இந்தியன் – 2″வை பற்றித் தான் இருக்கிறது. படம் எப்படி இருக்குன்னு பார்த்தஆடியன்ஸ் கிட்ட கேட்டா,  இதுக்கு ஆடியோ லாஞ்சில் அதிதி ஷங்கர் பாடுன பாட்டே பரவாயில்லைன்னு சொல்ற மாதிரி ஆகி விட்டது.

இப்படி எல்லாம் நடக்கும்ன்னு ஷங்கர் முன்னாடியே எதிர்பார்த்திருப்ப்பார் போல அதனால தான் ரிலீசுக்கு முன்னாடியே “இந்தியன்” ஃபர்ஸ்ட் பார்ட் ஃபேன்ஸ் மூளையில ஆழமா பதிஞ்சிட்டுன்னு சூசகமா “இந்தியன் – 2” ரிசல்ட்ட சொல்லிவிட்டார்.

படத்துல எது மைனஸ்ன்னு கேட்டால் ஃபுல் படமுமே மைனஸ் தான்னு சொல்லிட்டு வர்றாங்க, ஷங்கர் சொன்னது மாதிரி அந்த அளவு “இந்தியன்” ஃபர்ஸ்ட் பார்ட் கொடுத்த எதிர்பார்ப்பு தான். அந்த லெவல்ல படம் இருக்கும்னு என்ற நினைப்போட போன தன் விளைவு தான் இந்த அளவுக்கு நெகட்டிவ் கமென்ட்ஸ் வரக் காரணமாகி விட்டது.

Kamal Shankar
Kamal Shankar

அதிலும் ரொம்ப பெரிய மைனசா சொல்லப்படுறது மூனு மணி நேரம் ஓடுற படத்தோட நீளம் தான். படம் ஃபெய்லியர் லிஸ்ட்க்கு போறதிலிருந்து என்ன செஞ்சு காப்பாத்தலாம்னு ஷங்கர் ரொம்ப சீரியஸா திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டாராம். அதனால் படத்தினுடைய நீளத்தை குறைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்காருங்கிற நியூஸை பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.

அதாவது படத்தோட க்ளைமேக்ஸ் இருக்கிறதுலேயே ரொம்ப லெந்தா இருக்குதாம். அதனால் இருபது நிமிஷ சீன்களை வெட்டி விடலாம்னு ப்ளான் செஞ்சிருக்கிறாராம் ஷங்கர்.

எப்படியோ “இந்தியன் – 2” படத்தோட டீம் போட்ட ஹார்ட் வொர்க்குக்கு பலன் கிடைக்கனும், எத்தனையோ படங்கள் இதுக்கு முன்னாடி இதே மாதிரி ரிலீஸ் பண்ணும் போது நெகட்டிவ் ரிவியூஸ் வாங்கி அப்புறம் ஸ்லோ பிக்-கப் ஆகி சூப்பர் ஹிட்டா மாறியிருக்கு. அந்த லிஸ்ட்ல “இந்தியன் – 2″ம் இடம் பிடிக்கனும் என்பதுவே நிறைய பேரின் ஆசையாக மாறி வருகிறது இப்போது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.