நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் இது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாட்டின் பல்வேறு விஷயங்கள் குறித்து தினசரி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வந்த வண்ணமே இருந்தது.
எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் குற்றச்சாட்டினை வைத்து வந்தார். இந்நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து நேற்றைய தினம் எம்.பிக்கள் கேள்வி எழுப்பினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்த தீர்மாணத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் கலவரம் தொடர்பான பதில்களை கூறினார்.

இருபிரிவினரிடையே நடந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இதனால் மணிப்பூரின் அமைதி முற்றிலுமாக குறைந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மக்களவையில் பேசிய மோடி மணிப்பூரில் கலவரம் நடந்த பிறகு மாநில அரசும் மற்றவர்களுடன் இணைந்து மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை கொண்டு வர பணியாற்றி வருகிறது.
அங்கே வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்றார். முற்றிலும் அமைதி திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.
வன்முறை தொடர்பாக இதுவரை ஐனூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யாப்பட்டுள்ளனர். பதினோராயிரத்திற்கு மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கலவரத்தை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புள்ளி விவரங்களோடு விளக்கினார்.
மத்திய அரசு இரண்டு பேரிடர் குழுவின் இரண்டு அணிகளை மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது, மணிப்பூர் வெள்ள அபாயத்தை எதிர்கொண்ட போது எனவும் குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.








