தமிழ் திரை உலகின் உச்ச நடிகராக இருந்த நேரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கொண்ட அன்பு, மரியாதையின் காரணமாக “செந்தூர பாண்டி” படத்தில் நடித்து கொடுத்தார். தனது கேரியரின் வளர்ச்சிக்காக பக்கபலமாக இருந்த சந்திர சேகரின் மகன் விஜயை உயர்த்தி விடும் ஒரே நோக்கத்தில் பணமே வாங்காமல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் விஜயகாந்த்.

மறைந்த விஜயகாந்திற்கு தனது நன்றிக்கடனை செலுத்தும் விதமாக “கோட்” படத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விஜயகாந்த் நடிக்கும் காட்சிகள் இருக்கிறதாம் படத்தில். இது பற்றி கேப்டன் மனைவி பிரேமலதாவிடம் சொல்லியும் விட்டு காட்சி குறித்த விளக்கத்தை கொடுத்திருக்கிறாராம் “கோட்” படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.
கிட்டத்தட்ட படம் முடிந்து விட்ட நிலையில் ஒரே ஒரு நாளுக்கான வேலை மட்டும் தான் பாக்கி உள்ளதாம். படத்தை சொன்ன தேதியில் வெளியிட கடினமாக உழைத்து வருகின்றனாராம். படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகளின் மீது அதிக கவனம் காட்டி வந்து கொண்டிருக்கிறாராம் விஜய்.
காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும். எந்த விதாமான தொழில் நுட்ப இடைஞ்சல்களும் காட்சியை பாதித்து விடக்கூடாது. எல்லாவற்றையும் விட அந்த காட்சிகள் தனக்கு திருப்தியானால் மட்டுமே படத்தில் வைக்க சம்மதிப்பேன்.
இல்லையென்றால் அதை நானே நீக்கி விடுவேன் என கண்டீஸ்ன் போட்டுள்ளாராம் விஜய். மறைந்த நடிகர் என்பதை விட மாபெரும் மனிதர் விஜயகாந்த் என்பதால் அவர் வரும் காட்சிகள் செயற்கையாக மாறிவிடக்கூடாது, இயற்கையாக இருக்க வேண்டும் என ஸ்டிரிக்டாக சொல்லி விட்டாராம்.













