---Advertisement---

பதினைஞ்சில ஆரம்பிச்சது கடைசியில பத்துல முடிஞ்சிது…கமல் தாங்க காரணம்…உடைத்து பேசிய இயக்குனர்…

Published on: June 13, 2024
k.s.ravikumar
---Advertisement---

கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர். ரஜினி, கமல், அஜீத், விஜய் இன்னும் சொல்லப்போனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே வைத்து படங்களை இயக்கியவர். கமர்ஷியல் படங்களை மட்டுமே அதிக டார்கெட்டாக வைத்து களமிறமங்குபவர் ரவிக்குமார்.

அதோடு அதில் வித்தியாசங்களையும் காட்டுவதிலும் வல்லவர் இவரே. உதாரணமாக இவர் இயக்கிய “வில்லன்”,”வரலாறு” படங்களை சொல்லலாம். கதாநாயகன் அஜீத் இந்த இரண்டு படங்களிலும் நடித்த விதம் அனைவரையும் அசர வைத்தது.

கமர்ஷியல் கதை களமாக இருந்தாலும் படத்தில் நடித்தவர்களின் நடிப்பு திறமைக்கு சவால் விடும் கேரக்டர்களை அதிகமாக  வைத்திருப்பார்.

கமல்ஹாசனின் நம்ப முடியாத நடிப்பில் வெளியான “தசாவதாரம்” படத்தை இயக்கியது இவரே. படத்தை எப்படி எடுத்து முடிக்கப்போகின்றோம் என்ற பயம் தனக்குள்ளே இருந்ததாக சொல்லியிருந்தார்.

dasavatharam
dasavatharam

கமல் கொடுத்த உற்சாகமும், நம்பிக்கையும் தான் படத்தில் சுறுசுறுப்பாக பணியாற்ற வைத்ததாகவும் குறிப்பிட்டார். படத்திற்காக பதினைந்து விதமான கெட்-டப்களை வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டதாம். இறுதியாக அது பத்து கெட்-டப்பில் முடிந்ததாம்.

ஷங்கர் படம் போல நினைத்து பிரம்மாண்டமாக  எடுக்கலாம் என்ற எண்ணத்தில் பணிகளை துவக்கினாராம். படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போக போக பயம் கொடுத்ததாம்.

தனக்குத்தானே சூடு போட்டு கொண்ட கதையாக மாறிவிடுமோ என நினைத்தாராம் துவக்கத்தில். ஆனால் படம் வெளியாகி கிடைத்த வெற்றியை பார்த்த பிறகு தான் ரவிக்குமாருக்கு நம்பிக்கை பிறந்ததாம். “தசாவதாரம்” படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என சொல்லியும் இருந்தார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!

A collection of candid and charismatic high-definition photos of actor Sivakarthikeyan from recent public events and film promotions.

SK-RKFI Update: “65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!” சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?

Actor Yash's official look from Toxic movie with the announcement of the release date postponement.

Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?

Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.

Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!

TVK President Vijay offering prayers and touching the feet of Shirdi Sai Baba in Maharashtra ahead of election results.

Vijay in Shirdi: “முருகன் தரிசனம் முடித்து சாய்பாபா பாதம் தொட்டு வழிபாடு!” ஆன்மீகப் பயணத்தில் த.வெ.க தலைவர் விஜய்.. வைரலாகும் சீரடி புகைப்படங்கள்!