---Advertisement---

மனசு அலையபாயுதேன்னு சொல்ல வைச்ச மாதவனுக்கு பிறந்த நாள் இன்னைக்கு…

Published on: June 1, 2024
madhavan
---Advertisement---

கோடம்பாக்கத்தில் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் ஹீரோவாக நடிக்க வேண்டிய படம் “அலைபாயுதே”. கடைசி நிமிடத்தில் மணிரத்னம் முடிவை மாற்றியதால் ஹீரோவானார் மாதவன். சாக்லேட் பாய், க்யூடி என பெண் ரசிகைகளால் ரசிக்கப்பட்டவர் இவர்.

R.Madhavan
R.Madhavan

ஷாலினியுடன் இவர் நடித்த “அலைபாயுதே” படம் சூப்பர் ஹிட் ஆனது ஒரு பக்கமிருந்தாலும், மாதவன் இந்த படத்தின் மூலம் தனக்கான அஸ்திவாரத்தை தமிழ் சினிமாவில் போட்டுவிட்டார் என்றே தான் சொல்ல வேண்டும்.

அடுத்தது “மின்னலே” லவ்வர்-பாயாக இந்த படத்தில் இவரின் அழகில் மயங்கி தியேட்டரை நோக்கி படையெடுக்கத்துடங்கிவிட்டனர் இவரின் ரசிகர்கள். ஜோதிகாவுடன் “டும்…டும்..டும்…”படத்தில் நடித்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இவரின் வெற்றிப்படங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது சரண் இயக்கிய “ஜே,ஜே”.

காதலை வித்தியாசமாக சொல்லிய படம் அது. படத்தின் பாடல்களும் ஹிட் ஆக மாதவனை கோலிவுட்டில் முன்னனி ஹீரோக்கள் பட்டியலில் இணைய வைத்தது என்று கூட சொல்லலாம் ஜே.ஜே.வை. கமல்ஹாசனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் “நளதமயந்தி”,  “அன்பே சிவம்”. இதில் “அன்பே சிவம்”ல் கமலுடன் போட்டி போட்டிருப்பார் நடிப்பில்.

இருவருனுடைய பாப்புலாரிட்டியை அதிகரிக்க வைத்தது “அன்பே சிவம்”. நீண்ட நாட்களுக்கு பிறகு “இறுதிச்சுற்று” படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க படமோ எதிர்பார்த்ததைவிட அதிகமான வெற்றியை பெற்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நாலு வார்த்தை நச்சின்னு பேசிய டெல்லி கணேஷ்...மறுக்க முடியாமல் நின்ற கமல்ஹாசன்...

இப்போது படவாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்னர் ரசிகர்களை கிறங்கடித்தவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மாதவன் தனது 54வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். இவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்திவந்த வண்ணமே உள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!