---Advertisement---

வாய்ப்பில்ல ராஜான்னு சொன்ன சினிமா?…மீண்டும் பழைய வேலையை பார்க்கப்போன பிரபலம்!…

Published on: May 30, 2024
balachandar muthuraman
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஆயிரம் கணவுகளை சுமந்து கொண்டு சாதித்தே ஆகவேண்டும் என்ற ஆசையில் அதுவரை தான் பார்த்து வந்த வேலைகளை கூட விட்டு விட்டு  அதிக கஷ்டங்களை அனுபவித்து, தங்களது எண்ணம் ஈடேறாமல் சினிமாவை விட்டு தான் பார்த்து வந்த பழைய வேலையை தேடி மீண்டும் சென்றவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட ஒரு தருணத்தை  சூப்பர் ஸ்டார்  சந்தித்து உள்ளார் என்றால் அதை நம்மால் நம்பமுடியுமா?. பஸ் கண்டக்டராக இருந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தாலும், தனது நண்பர்களின் வற்புறுத்தலாலும் நடிக்க வந்தவர் ரஜினிகாந்த் என்பது ஊர் அறிந்த உண்மை.

rajini conductor
rajini conductor

சினிமாவில் வாய்ப்பு தேடித்தேடி அது கிடைக்காமல் மீண்டும் தான் பார்த்து வந்த கண்டக்டர் வேலையயே பார்க்கலாம் என ரஜினி கிளம்பி விட்டாராம் ஒரு நேரத்தில்.

தான் பணிபுரிந்த பஸ் கம்பெனிக்கு போன இடத்தில் தான் காத்திருந்தது ரஜினிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. வேலையை ராஜினாமா செய்யாமல்ம் முறையான தகவ்ல் சொல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பு விடுத்திருந்த  ஊழியர்களை வேலையை விட்டே தூக்கி விட்டதாம் பஸ் கம்பெனி நிர்வாகம். இந்த பட்டியலில் சிவாஜி ராவ் கெய்க்வாட் பெயரும் இருந்ததாம்.

மொத்ததில் இதுவும் போச்சு, அதுவும் போச்சு,  கோவிந்தா கோவிந்தா என நினைத்த ரஜினி எதற்கும் கோடம்பாக்கத்தில் இன்னொரு ரவுண்டு அடித்து பார்த்து வாய்ப்பு கிடைக்குமா? என பார்க்கலாம் என நினைத்திருக்கிறார்.

அதே போல ரஜினிக்கு வாழ்வு கொடுத்தது அவரது இரண்டாவது இன்னிங்ஸ் தான் என்று கூட சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் கே.பாலசந்தர் அவருக்கு அடுத்த படியாக எஸ்.பி. முத்துராமனை சொல்லலாம். ரஜினியை வைத்து அதிகமான படங்களை இயக்கிய இயக்குனர் அல்லவா அதனால்.

அதே போல ரஜினியின் நீண்ட நாள் விடுப்பினை கணக்கிட்டு அவரை பணி நீக்கம் செய்த பஸ் கம்பெனியும் கூடத்தான என சொல்லலாம். அவர்கள் மட்டும் தவறை மண்ணித்து மறுபடியும் வேலை கொடுத்திருந்தால் இந்தா சூப்பர் ஸ்டாரை பார்த்திருக்க முடியாமலே போயிருக்கும் அல்லவா?.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!