---Advertisement---

எப்படி உங்களால் இப்படி பாட முடியுது?…அடிக்கடி கேட்ட வைப் சாங்ஸ்தானே இதெல்லாம்!…

Published on: May 25, 2024
maalai dum dum
---Advertisement---

ரோஷினி தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகி. இவரது குரலில் உள்ள வசீகரம் தான் இவரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இவரின் பாடல்கள் பல நம் காதுகளில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம்  பாடியது இவர் தான் என்பது நம்மில் பலருக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்.

இவரின் பாடல்கள் ஒரு சிலவற்றை சொன்னாலே போதும் இவரின் பெருமை தன்னாலே புரிந்துவிடும். சமீபத்தில் வெளியான “மார்க் ஆன்டனி” படத்தில் ஒலித்திருக்கும் ‘ஐ லவ் யூ, மூட கெடுத்த மூதேவி’ பாடல். “எனிமி” படத்தில் வரும் சூப்பர் ஹிட் ‘மாலை டும், டும்’ பாடலை பாடியது ரோஷினியே. இப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சிகளில் இந்த பாடலை அதிகமாக கேட்க முடியும். அந்த அளவு இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் அது.

roshini
roshini

சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட்டான “ஈஸ்வரன்” பட ‘மாங்கல்யம் உன்னை அள்ளி அனைக்குது விரலு’  பாடல் இவரது சமீபத்திய ஹிட் பாடல்களில் ஒன்றாகும்.

ஹரி இயக்கத்தில் விஷால், பானு குத்தாட்டம் போட்ட “தாமிரபரணி” பட ‘கருப்பான கையாலே என்ன புடிச்சான், மனசுக்குள்ளே பேய் புடிச்ச ஆட்டுதம்மா’  பாடல். “தீராத விளையாட்டு பிள்ளை” படத்தில் வந்திருக்கும் ‘என் ஜன்னல் வந்த காற்று தாவனிப்போட்ட மங்கா’ பாடலும் இவர் பாடியது தான்.

சிம்புவின் வெற்றி படமான “குத்து”வில் ரம்யாகிருஷ்ணன ஆடித்தள்ளிய ‘ஏ போட்டுத்தாக்கு’ என துவங்கி துள்ளி, துள்ளி ஆட வைத்த இந்த குத்துப்பாடலும் ரோஷினியின் வைப்ரேட்டிங் வாய்ஸில் வந்த பாடலே.

இப்படி நாம் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த இந்த பாடல்க்ளை போல இன்னும் அதிகமான பாடல்களை வருங்காலத்தில் ரோஷினி பாடி மகிழவைப்பார் என நம்புகிறது அவரின் ரசிகர் கூட்டம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!

SS Rajamouli honoured at the Wall of Filmmakers in Institut Lumière, France.

உலகையே அதிரவைத்த ராஜமௌலி! ஸ்கோர்செஸி வரிசையில் இடம் பிடித்த முதல் இந்தியர்.. பிரான்சில் நடந்தது என்ன?

Superstar Rajinikanth in the official announcement poster of Jailer 2.

இதுதான் அந்த மாஸ் அப்டேட்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்.. அக்டோபரில் அதிரப்போகும் தியேட்டர்கள்!

Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC.

ரத்தக் களறியாகும் ‘தேவதாஸ் – சந்திரா’ காதல்! லோகேஷ் கனகராஜின் அதிரடி என்ட்ரி.. ஜூலை 31-ல் ‘DC’ மெகா ரிலீஸ்!

Actor Shanmuga Pandian and director Thiru during the announcement of their new film.

மீண்டும் களமிறங்கும் ‘கேப்டன்’ பேனர்! இயக்குநர் திருவுடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்.. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பார்ட்-2வா இருக்குமோ? 

Chief Minister Vijay in the poster of his final film Jananayagan.

சென்சார் தடைகளைத் தகர்த்த ‘ஜனநாயகன்’! விஜய் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அந்த மாஸ் சர்ப்ரைஸ்.. ரிலீஸ் தேதி இதுதானா?