---Advertisement---

நம்ம வேணும்னா இத செய்யலாமா!…ரஜினிக்கு ஐடியா கொடுத்த தயாரிப்பாளர்?…தலையசைப்பாரா தலைவர்?…

Published on: May 21, 2024
rajini
---Advertisement---

“வேட்டையன்”, “கூலி”  என இரண்டு படங்களில் இப்போது கமிட்டாகி உள்ளார் ரஜினிகாந்த். “கூலி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளிவந்து தாறுமாறு ஹிட் ஆகியுள்ளது. படப்பிடிப்பில் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு ரஜினி துபாய்க்கு போயிருக்கிறார் என செய்திகள் சொல்கிறது.

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் படங்கள் நல்ல வசூலை குவித்துத்தந்தது தயாரிப்பாளர்களை அதிகமாக யோசிக்க வைத்துள்ளது. “கில்லி” படைத்துக்கொடுத்த சாதனை அப்படி வசூலில். அஜீத் பிறந்த தினத்தன்று அவர் நடித்திருந்த “தீனா”, “பில்லா” படங்களும், வெளிநாடுகளில் “மங்காத்தா” படமும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து கொடுத்தது.

ரஜினியின் “படையப்பா” இதே போல ரீ-ரிலீஸ் செய்ய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அதை பற்றி தான் முடிவு செய்ய முடியாது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் தான் முடிவெடுக்க வேண்டும் என சொல்லியிருந்தார்.

padayappaa
padayappa

படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராஜலக்ஷ்மி ஃபிலிம்ஸ்  தேனப்பன் துபாயில் வெகு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பேச்சுவார்த்தையினிடையே “படையப்பா” பற்றி சொன்னாராம் தேனப்பன். இப்போது இருக்கின்ற நேரத்தில் படத்தை ரீ-ரிலீஸ் செய்வது நல்லதாக அமையும் என ரஜினியிடம் தனது கருத்தினை சொல்லியிருக்கிறாராம்.இந்த தகவல்களை ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நீங்காத சோகம் நெஞ்சுக்குள்ளே...ஆனந்த ராகம் தான் உதட்டிலே...80தை கடக்கும் இளையராஜா!...

ஒருவேளைதேனப்பன் சொன்னதற்கு ரஜினி தலையசைத்து விட்டார் என்றால் ரஜினி ரசிகர்களுக்கு இந்த வருடம் சிறப்பானதாக அமைந்தே விடும்.  உலகம் முழுவதும் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்ற படையப்பா மீண்டும் ஒரு வசூல் வேட்டையை ஆடிக்கொடுத்து விஜய், அஜீத் பட ரீ-ரிலீஸ் ரெக்கார்டுகளை முறியடித்து ரஜினியின் மாஸை உறுதிப்படுத்திவிடும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!