---Advertisement---

மோகன்லாலுக்கு பிறந்தநாள்!…சொல்லி அடிக்கும் ரசிகர்கள்…

Published on: May 21, 2024
mohanlal
---Advertisement---

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். மலையாள நடிகர் என்று சொல்லி இவரை தமிழ் சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்து விட முடியாது இவரை.  ஏராளமான நேரடி தமிழ் படங்களில் நடித்து இங்கேயும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

பிரபுவுடன் இவர் நடித்திருந்த “சிறைச்சாலை” படத்தில் டாக்டராக வந்திருந்தார். யதார்த்தமான அந்த நடிப்பு ஒரு வேளை வேறு யாரும் இதில் நடித்திருந்தால் இப்படி இருந்திருக்காது என சொல்லவைக்கும் விதமாகத்தான் தனது ஃபர்பாமெஸை காட்டியிருந்தார். மலையாளம் கலந்த தமிழை இவர் பேசுவதும் இவரின் பலமாக பார்க்கப்படுகிறது.

 

jailor jilla
jailor jilla

“ஜில்லா” படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். படத்தில் இவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் போட்டியும், ‘சிவனும் சக்தியும் சேர்ந்து வந்த மாசுடா’  பாடல் பொறி பறக்கவிட்டது.  தியேட்டர்களில். உலக நாயகன் கமல்ஹாசனுடன் “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருப்பார். மாறன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர் கமல்ஹாசனுடன் போட்டி போட்டிருந்தார் நடிப்பதில்.

ரஜினியுடன் சமீபத்தில் “ஜெயிலர்” படத்தில் வந்திருப்பார். வித்தியாசமான முடி, கூளிங் கிளாஸ் என மாஸாக காண்பிக்கப்பட்டார். ரஜினி சொன்னதை தட்ட முடியாமல் இவர் அவருக்கு உதவி செய்வது தான் அந்த படத்தில் கொடுக்கப்பட்ட் ரோல். குறைவான காட்சிகளில் மட்டுமே படத்தில் நடித்திருந்தாலும், வேற லெவெல் சீன்களாகத்தான் அமைந்தது “ஜெயிலர்” படம் இவருக்கு.

மல்லுவுட் மட்டும் இவரை கொண்டாடவில்லை கோலிவுட்டும் தான் இவரது பிறந்த தினத்தை சிறப்பித்து வருகிறது. இந்திய ராணுவத்தில்  தனது சேவையை செய்துள்ளார். 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019ம் ஆண்டில் பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார் மோகன்லால்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shalini Ajith Kumar sharing a romantic and candid photo with her husband Ajith Kumar on their wedding anniversary.

Anniversary Special: “என்றென்றும் காதல்!” அஜித்துடன் திருமண நாளை கொண்டாடிய ஷாலினி.. இணையத்தை கலக்கும் கியூட் போட்டோ!

Actor RJ Balaji speaking at an event about director Lokesh Kanagaraj missing his vote due to a missed flight.

Lokesh Kanagaraj Election Issue: “பிளைட் கேட் மூடப்பட்டுவிட்டது!” லோகேஷ் ஓட்டு போடாதது ஏன்? உண்மையை உடைத்த ஆர் ஜே பாலாஜி!

Screenshot of Director Mari Selvaraj's official tweet praising Dhanush's performance in Kara (கர).

Mari Selvaraj Review: “திரை சிலிர்ப்பு.. நெஞ்சுக்குள் உசுப்பிய தனுஷ்!” கர படத்தைப் பார்த்து மாரி செல்வராஜ் போட்ட உருக்கமான ட்வீட்.. ஜித்து முண்டா யார்?

Official award poster of actress Honey Rose winning the 2nd Best Actress at the 49th Kerala Film Critics Award 2025 for Rachel.

49th Kerala Film Critics: “ரேச்சல் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!” முதல் விருதை வென்று நெகிழ்ந்த ஹனி ரோஸ்.. வைரலாகும் போஸ்டர்!

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!