---Advertisement---

சூரி ஹீரோ ஆக காரணமே நான் தான்!…காப்பி ரைட்ஸ் கேக்கும் சிவகார்த்திகேயன்?…

Published on: May 21, 2024
soori sivakaarthikeyan
---Advertisement---

சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெளித்திரைக்கு ப்ரமோஷன் வாங்கி வந்து  புகழடைந்தவர். இவருக்கு இப்போது இருக்கும் ரசிகர்கள் பலம் உலகறிந்ததே. அதிலும் இவருடன் சூரி இணைந்து நடித்துன்விட்டாலே சீனுக்கு, சீன் கைத்தட்டல்கள் தான். “வருத்தப்படாத  வாலிபர் சங்கம்”,  “சீமராஜா” படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

சூரி ஹீரோவாக நடித்து, சசிக்குமாரும் நடித்துள்ள “கருடன்” பட ஆடியோ வெளியிடப்பட்டது. ஆடியோ-லாஞ்ச் விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், தனக்கும் சூரிக்கும் உள்ள உறவை பற்றி சொல்லியிருந்தார். சூரி தன்னை அன்பாக தம்பி, தம்பி என அழைப்பார். அதே போல சிவகார்த்திகேயனும் சூரியை அண்ணன் என்று தான் அழைப்பாராம்.

“சீமராஜா” பட ஷூட்டிங் நடந்து வரும் போது சூரியிடம் நீங்க ஹீரோவா நடிங்க அண்ணன் என முதல் ஆளாக சொல்லியிருந்தாராம். சூரியோ எதுக்கு தம்பி, நம்ம வண்டி ஒழுங்கா ஓடிக்கிட்டு இருக்கு. எதுக்கு இந்த தேவையில்லாத வேலையெல்லாம்னு பதில் கொடுத்தாராம். திடீரென ஒரு நாள் இயக்குனர் வெற்றி மாறன் தன்னை அழைத்து “விடுதலை” படத்தை பற்றி பேசியதை சொன்னாராம்.

soori viduthalai
soori viduthalai

சிவகார்த்திகேயன் நல்ல வாய்ப்பு விட்டுறாதீங்க என சொல்லி வாழ்த்தினாராம். எப்படியோ சூரி ஹீரோ ஆவதற்கு நானே முக்கிய காரணம் என சொல்லியிருக்கிறார்.  சிவகார்த்திகேயன் தயாரிக்க, சூரி கதாநாயகனாக நடிக்கும் “கொட்டு காளி” படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதே மாதிரி இன்னும் நிறைய படங்களில் சூரி அண்ணன் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என தனது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவுக்கரசி “கருடன்” படத்தில் நடித்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.