---Advertisement---

நீங்க நடிக்க மாட்டேன்னு சொன்னா சும்மாவிட்டுருவேனா?…மணிரத்தினம் போட்ட மாஸ்டர் ப்ளான்!…

Published on: May 20, 2024
thulkar jeyamravi maniratnam
---Advertisement---

இந்தியன்-2 படம் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ள குஷியில் இருக்கிறார் கமல்ஹாசன். படத்தினுடைய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. தனது வாழ்நாளிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து கொடுத்தது “விக்ரம்” தான் என கமலே அவரே பெருமையாக சொல்லியிருக்கிறார். இப்படி வெகு நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு கலைத்துறை கைகொடுக்க துவங்கி இருக்கிறது மீண்டும் என்றே சொல்லலாம்.

மணிரத்னத்துடன் கமல் “நாயகன்” படத்திற்கு பிறகு இணைந்துள்ள “தக்-லைஃப்” படத்தினுடைய படப்பிடிப்பு வெகு ஜோராக நடந்து வருகிறதாம். செர்பியா, ராஜஸ்தான், டெல்லி, இப்போது சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

ட்ரயலரில் காண்பிக்கப்பட்ட காயல்பட்டினத்துக்கு எப்போ வருவீங்கன்னு சார்ன்னு கேட்க ஆரம்பிச்சிருக்கிறாங்களாம் அந்த ஊர்க்காரங்க. எது எப்படியோ பட ஷூட்டிங் தங்கு தடை இல்லாமல் நடந்துட்டு வருகிறது என்ற செய்தியே மகிழ்ச்சியை தருகிறதாகத்தான் தெரிகிறது.

simbu
simbu

முதலில் துல்கர் சல்மான், ‘ஜெயம்’ரவி  “தக்-லைஃப்”ல் கமிட்டாகி இருந்தனர். பிறகு அவர்கள் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் சிம்பு அவர்கள் இருவருக்கும் பதிலாகத்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டர் என்ற ஒரு தகவலும் வந்தது.

‘ஜெயம்’ ரவி, துல்கர் இருவரும் படத்திலிருந்து வெளியேறியதுமே மணிரத்னம் படத்தினுடைய ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்து விட்டாராம். தற்பொழுது வரை உள்ள செய்தி என்னவென்றால் இந்த படத்தில் கமலும், சிம்புவும் மட்டுமே நடித்து வருகிறார்களாம். ‘ஜெயம்’ரவி, துல்கர் சல்மானுக்கு பதிலாகத்தான் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் எல்லாம் உண்மைக்கு அப்பாற்பட்டிருக்கிறது என ‘வலைப்பேச்சு’ அந்தணன். நீங்க நடிக்க மாட்டேன்னு சொன்னதுக்காக நான் படம் எடுப்பதை நிறுத்த முடியுமா?, எனக்கு தேவையான சேஞ்ச பண்ணிக்கிறேன்னு சொல்லி அசால்டு பண்ணிவிட்டாராம் மணி.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shalini Ajith Kumar sharing a romantic and candid photo with her husband Ajith Kumar on their wedding anniversary.

Anniversary Special: “என்றென்றும் காதல்!” அஜித்துடன் திருமண நாளை கொண்டாடிய ஷாலினி.. இணையத்தை கலக்கும் கியூட் போட்டோ!

Actor RJ Balaji speaking at an event about director Lokesh Kanagaraj missing his vote due to a missed flight.

Lokesh Kanagaraj Election Issue: “பிளைட் கேட் மூடப்பட்டுவிட்டது!” லோகேஷ் ஓட்டு போடாதது ஏன்? உண்மையை உடைத்த ஆர் ஜே பாலாஜி!

Screenshot of Director Mari Selvaraj's official tweet praising Dhanush's performance in Kara (கர).

Mari Selvaraj Review: “திரை சிலிர்ப்பு.. நெஞ்சுக்குள் உசுப்பிய தனுஷ்!” கர படத்தைப் பார்த்து மாரி செல்வராஜ் போட்ட உருக்கமான ட்வீட்.. ஜித்து முண்டா யார்?

Official award poster of actress Honey Rose winning the 2nd Best Actress at the 49th Kerala Film Critics Award 2025 for Rachel.

49th Kerala Film Critics: “ரேச்சல் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!” முதல் விருதை வென்று நெகிழ்ந்த ஹனி ரோஸ்.. வைரலாகும் போஸ்டர்!

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!