---Advertisement---

அதிருதுப்பா பூமி…ஆட்டத்தை ஆரம்பித்த அஜீத் ரசிகர்கள்…வெளிவந்த அப்டேட்!…

Published on: May 19, 2024
ajith
---Advertisement---

“விடாமுயற்சி” என்ன ஆனது என்றே தெரியவில்லை. படபெயர் சொல்லப்பட்ட பிறகு அதனை பற்றி இதுவரை எந்த தகவலுமே வரவில்லையே என கவலையில் இருக்கின்றனர் அஜீத்குமாரின் ரசிகர்கள். ஆனால் அதற்கு புத்துயிர் கொடுக்கும் விதமான பணிகள் நடந்து வருவதாக சமீபத்திய செய்திகள் சொல்லியது. அது உண்மையா?, இல்லை பொய்யா? என நினைக்கும் நேரத்தில் ஆறுதலாக வந்தது தான் “குட் பேட் அக்லி” பட அறிவிப்பு.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் செய்தி. அஜீத் ரசிகர்களின் ஆவலுக்கு தீனி போடும் விதாமான அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது படக்குழு. அஜீத் ஆதீக், தேவிஸ்ரீபிரசாத் கூட்டணியில் தயாராகிவரும் இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ  செய்தியை சில நிமிடங்களுக்கு முன்னர் தான் சொல்லியிருக்கிறது படக்குழு.

ajith good bad ugly
ajith good bad ugly

அதோடு மட்டுமல்லாமல் அஜீத் குமாரின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்கள். மூன்று அஜீத் ஒரே நிற சட்டையில் இருப்பதான படம் வந்துள்ளது. அதனை கொண்டாடி வருகின்றனர் ஏ.கே. ரசிகர்கள். அஜீத்தின் கெட்-அப்களின் அடையாளமாக பார்க்கப்படும் கூலிங் கிளாஸ் இதிலும் இருக்கிறது.  இதை அவர் அனிந்து இருக்கும் போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி கடலில் தளைத்து வருகின்றார்கள் ரசிகர்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கமல் தானா இல்ல வேற யாராவது மேக் - அப் போட்டு வந்திருக்காங்களா?...சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஷங்கர் - உலக நாயகன்!...

“துணிவு” படத்திற்கு பிறகு அஜீத்தை திரையில் பார்க்க தவம் கொண்டு காத்திருக்கும் அவர்களுக்கு இன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் படம் தொண்டை வறன்ட தாகத்தில் வருபவரின் கண்களில் பட்ட மண்பானை தண்னீர் போல தான் இருப்பது போல உணர முடிந்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional concept graphic representing Prashanth's upcoming courtroom drama Ranjan The Advocate, the Tamil remake of Telugu hit Court.

டிசம்பர் 1 முதல் மீண்டும் தொடங்கும் பிரசாந்தின் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ படப்பிடிப்பு! ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Editorial concept graphic representing Tamil actor Shiva's humorous press meet interaction regarding politics.

அரசியலுக்கு வரப் போகிறாரா அகில உலக சூப்பர் ஸ்டார்? “தமிழ்நாடு மட்டுமல்ல உலகப் பிரச்சனையையே தீர்க்கப் போகிறேன்!” என சிவா கிண்டல்!

Promotional concept graphic representing the high-voltage clash between Ajith Kumar and Shivarajkumar in Adhik Ravichandran's Daredevil.

ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையும், அஜித் பேசிய வார்த்தையும்… ஹைதராபாத் இரவுப் படப்பிடிப்பில் இணையும் சிவண்ணா!

Promotional concept graphic representing the upcoming Tamil romantic drama starring GV Prakash Kumar and Malavika Manoj, directed by Hariharan Ram.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷ் புதிய படம்… ‘ஜோ’ கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?

Promotional concept graphic representing Kamal Haasan and Shankar's pan-Indian big budget action thriller Indian 3.

பொங்கல் ரேஸில் இருந்து விலகும் ‘இந்தியன் 3’… படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

Promotional concept graphic representing the Tamil-Telugu family entertainer Pathu Naal Raja starring Sathish and Aadi Saikumar.

எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சதீஷ், ஆதி சாய்குமார் நடித்துள்ள ‘பத்து நாள் ராஜா’ திரைப்படம் விரைவில் வெளியீடு!