---Advertisement---

ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஆதித்யா வர்மா படப்பிடிப்பு…

By Sri
Published on: May 16, 2019
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஆதித்யா வர்மா படப்பிடிப்பு 01
---Advertisement---

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஆதித்யா வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது தெரியவ்ந்துள்ளது.

ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஆதித்யா வர்மா படப்பிடிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா கடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக்கான ‘வர்மா’-வை பாலா இயக்கினார்.

விக்ரம் மகன் துருவ் அப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  ஆனால், பாலா இயக்கிய விதம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால், வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் வர்மா மீண்டும் உருவானது.

அர்ஜூன் ரெட்டி படத்தின் இணை இயக்குனர் கிரிசய்யா இப்படத்தை இயக்கினார். கடந்த மார்ச் மாதம் 10 தொடங்கிய படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் சென்னை மற்றும் போர்ச்சுகள் நாட்டில் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் முடிவடைந்துள்ளது.இது தொடர்பாக டிவிட் செய்துள்ள இப்படத்தி தயாரிப்பாளர் ‘ஆதித்யா வர்மா படப்பிடிப்பு முடிந்துவிட்டது. துருவின் மகிழ்ச்சியை பாருங்கள்’ எனக்குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.