---Advertisement---

இந்த பாட்டெல்லாம் விஜய் பாடினது தான்!…தளபதி பாட்டுக்கு கால்கள் தன்னாலயே ஆடுமே!…

Published on: May 15, 2024
---Advertisement---

விஜய் கதாநாயகனாக நடிக்க துவங்கி அவரது முகம் மக்கள் மனதில் பதியத்துவங்கிய காலத்திலிருந்தே அவரது குரலில் தான் நடிக்கும் படங்களில் பாடல்களை பாடுவதை பழக்கமாக வைத்து வருகிறார். கண்களை மூடிவிட்டு சொல்லலாம் அவரது படத்தில் நிச்சயமாக ஒரு குத்துப்பாட்டு இருக்கத்தான் செய்யும் என்பதை.

வயதாக வயதாக அவரது நடனத்தில் வேகம் கூடத்தான் செய்கிறதே தவிர அதில் இது வரை தொய்வு ஏற்பட்டது கிடையாது. புயல் வேகத்திலான அசைவுகளாக இருக்கட்டும், சின்ன சின்ன டான்ஸ் ஸ்டெப்களாக இருக்கட்டும் இவருக்கு நிகர் இவரே தான். இப்படி நடனத்தில் கில்லாடியான விஜய் தனது சொந்த குரலில் பாடி நடனமாடிய பாடிய பாடல்கள் பல உண்டு.

அவரது தாய் ஷோபனாவுடன் “விஷ்ணு” படத்தில் அவர் பாடிய ‘தொட்டபேட்ட ரோட்டு மேல முட்டை புரோட்டா’ பாடலில் துவங்கி ‘அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு’ பாடலாக இருக்கட்டும் தியேட்டர் ஸ்கிரீன் முன்னால் வந்து நின்று வந்து நின்று ஆட வைக்க செய்தது ரசிகர்களை. “மாண்புமிகு மாணவன்” படத்தில் அவர் பாடிய ‘திருப்பதி போன பட்ட பட்ட’ பாடலாக இருக்கட்டும்.

vijay
vijay

 

“வாரிசு” படத்தில் அவரின் குரலோடு வந்த ‘ரஞ்சிதமே , ரஞ்சிதமே’ பாடலுக்கு ஆட நினைக்காத நெஞ்சங்களே கிடையாது என சொல்லலாம்.

“தலைவா” படத்தில் பாடிய ‘வாங்கண்ணா, வணக்கங்கண்ணா’ பாடலாக இருக்கட்டும். “ஜில்லா”வில் வரும் ‘கண்டாங்கி கட்டி வந்த பொன்னு’ பாடல், “நெஞ்சினிலே” படத்தின் ‘தங்க நிறத்துக்குத்தான் தமிழ் நாட்ட எழுதித்தரட்டுமா’, “மாஸ்டர்” படத்தின் ‘லெட் மீசே எ குட்டி ஸ்டொரி’, “பிகில்” படத்தில் வரும் ‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம’ பாட்டு. சமீபத்தில் வெளிவந்த “லியோ” படத்தின் ‘நா அண்ணன் எறங்கி வரவா’ பாடல் விரைவாக வெளியாகிவிடும் என எதிர் பார்க்கப்படும் “கோட்” படத்தின் ‘விசில் போடு’ பாடல் என அவரின் படங்கள் பெற்ற வெற்றிளைப்போலவே இந்த பாடல்களும் ரசிக்கர்களை கைத்தட்டி ரசிக்க வைத்தவைகளாகும்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!

SS Rajamouli honoured at the Wall of Filmmakers in Institut Lumière, France.

உலகையே அதிரவைத்த ராஜமௌலி! ஸ்கோர்செஸி வரிசையில் இடம் பிடித்த முதல் இந்தியர்.. பிரான்சில் நடந்தது என்ன?

Superstar Rajinikanth in the official announcement poster of Jailer 2.

இதுதான் அந்த மாஸ் அப்டேட்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்.. அக்டோபரில் அதிரப்போகும் தியேட்டர்கள்!

Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC.

ரத்தக் களறியாகும் ‘தேவதாஸ் – சந்திரா’ காதல்! லோகேஷ் கனகராஜின் அதிரடி என்ட்ரி.. ஜூலை 31-ல் ‘DC’ மெகா ரிலீஸ்!