---Advertisement---

விஜயகாந்துக்கு துப்பாக்கி செட்டாகும் துண்டெல்லாம் எடுபடுமா?…சந்தேகப்பட்ட இப்ராஹிம் ராவுத்தர்!….

Published on: May 11, 2024
vijayakanth
---Advertisement---

“கிழக்கு வாசல்” படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து அதே போல கிராமத்து கதையை மையமாக  வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்.  கதைக்கு நாயகனாக விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு அவரிடம் சம்மதம்  கேட்பதற்காக சந்திக்க சென்று இருக்கிறார்.

இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்தும் நெருக்கமான தோழர்கள் என்பது உலகமே அறிந்தது தான். விஜயகாந்தை  நீ, போ, வா என ஒருமையில் பேசக்கூடிய அளவில்  தான் இருவருக்கும் இடையான நட்பு இருந்தது. ஆர்.வி.உதயகுமார் சொன்ன கதையைக் கேட்டு இப்ராஹிம் ராவுத்தாரோ இவர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கண்டம் விட்டு கண்டம் தாண்டிக்கிட்டு  இருக்குராரு. ரோப் கட்டிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிக்கிட்டு இருக்காரு . இவரு கிட்ட போய் வேஷ்டி, துண்டை எல்லாம் கட்டிட்டு வரச்சொன்னா ரசிகர்கள ஏத்துக்குவாங்களா? என கேட்டிருக்கிறார்.

vijayakanth 5

 

அதோடு இப்பொ விஜயகாந்த் போயிட்டு இருக்கிற பாதையில இருந்து இது மாறுவது மாதிரி ஆகிவிடுமே என சொல்லியிருக்கிரார். அதற்கு உதயகுமாரோ இந்த படம் நல்ல ஹிட் ஆகும் என ஒரே வார்த்தையில்  சொல்லி முடித்து விட்டாராம்.

அதோடு  ஆர்.வி. உதயக்குமார் கதையை  மேலோட்டமாக மட்டுமே சொன்னாராம்.  ஊரில் மிக முக்கியமான புள்ளி. இவரைக்கண்டால் ஊரே எழுந்து நின்று மரியாதை கொடுக்கும். அவர் ஊருக்காரர்களுக்கு முன்  தலை குனிகிறார்.  அதற்கு காரணம் என்ன?  இதனை மட்டும் தான் சொன்னாறாம்.  படத்தில் விஜயகாந்த் நடிக்க தூங்கிய பின்னரே கதையை  தெளிவாக எடுத்து சொன்னாராம். அப்படி உருவான படம் தான் சின்ன கவுண்டர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நான் ரொம்ப பிஸின்னு சொன்ன கவுண்டமணி...கிடைத்த நேரத்த கவர் பண்ணிய ரஜினி!...

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!